Para
February 6, 2025 at 03:20 PM
படித்து ரசித்தேன் - க. ராஜாமணி உலகம் உன் வசம், சோம வள்ளியப்பன் ஆங்கில வழி நூல்களில் தான் சுய முன்னேற்ற புத்தகங்கள் , வாழ்க்கைக்கான நிதி மேலாண்மை புத்தகங்கள் பெரும்பாலும் அதிகம் கிடைக்கின்றன. பிரையன் ட்ரையாசி, ஸ்டீபன் ஆர். கார்வே, நெப்போலியன் ஹில், ஸ்பென்சர் ஜான்சன் எனப் பெயர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் இறையன்பு ,சுகி சிவம், ஸ்வாமி சுகபோதானந்தா, எஸ்.கே.முருகன் , என்.சொக்கன் என அந்த வரிசையில் இருப்பவர் சோம.வள்ளியப்பன். இவரது உலகம் உன் வசம் புத்தகம் நிச்சயம் நம்முள் மாற்றத்தைத் தூண்டும் வண்ணம் இருக்கிறது. யார் யாரிடம் எப்படி பேசுவது, பேச அணுகுவது , எங்குப் பேசுவது யார் மூலமாக பேசுவது? மனத்தடைகளை கண்டறிவது அதை புறந்தள்ளுவதற்கான வழிமுறைகள் என அத்தனையும் எடுத்து வைக்கிறார் எளிய உதாரணங்களுடன். அவற்றுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்ல பலனை தரும். இப்புத்தகம் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும், வீட்டில் உள்ளோருக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கு ம் , முன்னேறத் துடிப்பவர்களுக்கும் என அத்தனை பேருக்கும் நூல். பிறரிடம் நல்லதை சொல்ல,பாராட்ட, பொதுவெளியில் சொல்லவேண்டும் என்கிறார். அதிலும் உண்மையாக உணர்ச்சிமயாமாக பாராட்ட வேண்டும் எல்லோர் முன்னிலையிலும். இன்றைய நிலையில் யாரும் அதை செய்வதில்லை , வசைபாடுவது என்றால் மட்டும் பொதுவெளியில் பதிவிடுகிறோம். பேச நினைப்பதையெல்லாம் பேசிவிடுவதால் எல்லாம் முடிந்துவிடுவதில்லை எப்படி அளந்து பேசவேண்டும் என்பதை ஒரு அத்தியாயத்தில் விளக்குகிறார். இப்படி வெற்றியின் சூட்சுமத்தை அழகுபட எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் சோம. வள்ளியப்பன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு சாதாரண கட்டுரை என நினைத்துக் கொண்டு கடந்துபோவதை விட ஒவ்வொரு அத்தியாயத்தையும் நம் வாழ்வுடன் ஒப்புநோக்கி நிறை குறைகளை சீர்தூக்கி வாழ்க்கையில் பரீட்சித்து பார்ப்பது சிறந்தது. அப்படி செய்வோமானால் உலகம் நம் வசமே நன்றி க.ராஜாமணி
❤️ 👍 👏 6

Comments