Makkal Needhi Maiam
January 31, 2025 at 12:05 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி மூகாம்பிகா ரத்தினம் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி, கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவர் S.ரகுபதி மற்றும் மருத்துவக் குழுவினர் 150-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. கண்ணன், திரு. பிரபு, திரு. தனவேந்திரன், திரு. வரதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#kamalhaasan
#makkalneedhimaiam
❤️
👍
💚
5