Makkal Needhi Maiam
7.4K subscribers
Verified ChannelAbout Makkal Needhi Maiam
Official WhatsApp Channel of Nammavar Thiru Kamal Haasan's Makkal Needhi Maiam நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸாப் சானல்
Similar Channels
Swipe to see more
Posts
https://x.com/ikamalhaasan/status/1933167750396137831?t=KiNQY_2zGLA4YL2hTT9BzQ&s=19 https://www.facebook.com/share/p/1CLnJF1LGU/ The crash in Ahmedabad has left the nation stunned in sorrow. In this tragic hour, my heart reaches out to the victims and their grieving families.
நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வருகிற ஜூன் 14-ஆம் தேதி, சனிக்கிழமை அன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்திக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைப் பயன்படுத்தும்படி அன்புடன் வலியுறுத்துகிறோம். நன்றி! நாளை நமதே! ஆ. அருணாச்சலம் M.A., B.L., பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Makkal Needhi Maiam President Kamal Haasan extends heartfelt condolences to the bereaved families of the victims who lost their lives in the tragic Ahmedabad plane crash. #KamalHaasan #MakkalNeedhiMaiam

பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத், மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை மற்றும் நெல்லை மண்டலங்கள்), சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன், நற்பணி அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி, தொழிலாளர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. MK ராஜன், மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர், துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மாணிக்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் திரு. சசி ஜெயபிரகாஷ், திரு. ஜெகதீஷ், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஸ்டான்லி, திரு. ஷெல்டன், திரு. சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #KamalHaasan #MakkalNeedhiMaiam

மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதல்படி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் போரூர் சமுதாய நலக்கூடத்தில், மாணவர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு அவர்களின் தலைமையில், திரு. பா.அப்துல் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள், கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
