
Ellorum Nammudan
February 27, 2025 at 06:04 AM
தாய்மொழிகளை அழித்த ‘கொலைகார’ இந்தி!
2011 ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2001 முதல் 2011 வரை மட்டும் இந்தி மொழி 25 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தி பேசுபவர்களின் பட்டியலில் புதிதாக 10 கோடிப் பேர் சேர்ந்திருக்கிறார்கள். பல்லாண்டுகளாகத் தொடர்ந்துவரும் பல்வேறு முயற்சிகளின் விளைவு இது.
இந்தி வளர, வளர தாய்மொழிகளை பல மாநிலங்கள் இழந்திருக்கின்றன. அதற்கு உத்தரப்பிரதேசமும் விதிவிலக்கல்ல. தாய்மொழிகளில் ஒன்றான போஜ்புரியை உத்தரப்பிரதேசத்தில் அலுவல் மொழியாக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு இந்தி கபளீகரம் செய்திருக்கிறது.
சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மிகச் சிறிய அலுவல் மொழி. 24,821 பேர்தான் சமஸ்கிருத மொழி பேசுகிறார்கள்.
சம்ஸ்கிருதத்தை கற்றவர்கள் தங்கள் தாய்மொழியை இழந்தவர்களாக இருப்பார்கள்.
இந்தியாவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் உ.பி.,ம.பி.,ராஜஸ்தான், பீகார்,டெல்லி,உத்தராகண்ட், இமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட் ஆகிய 9 தான் இந்தி மாநிலங்கள்.
பீகாரின் தாய்மொழி மைதிலி, உத்தரப்பிரதேச தாய்மொழிகளான விரசு, அவதி, கனோசி, மத்தியப் பிரதேசத்தின் புந்தேல்கண்டி, சவுராட்டிரத்தின் சூரசேனி , அரியானாவின் தாய்மொழி அரியானவி ஆகியவை முற்றிலும் அழிந்து போய்விட்டன.
உத்தரப்பிரதேசத்தின் போஜ்புரி உயிர் பிழைக்க போராடிக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்த மொழிக்கும் சமாதி கட்டிவிடும் இந்தி.
தென்மாநிலங்களில் ஐதராபாத்தை கபளீகரம் செய்துவிட்டது இந்தி. கர்நாடகா, கேரளாவுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாய்மொழிகளை மட்டுமல்லாது, நமது பாரம்பரியம், இலக்கியங்களையும் சேர்த்து இந்தி அழித்துவிடும் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன.
இதுவரை 25 மொழிகளை காவு வாங்கி வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறது இந்தி மொழி.
தமிழ்மொழியை அழித்துவிட்டால், தமிழர்களின் தொன்மையை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்துவிட்டால் தமிழ் மண்ணை கைப்பற்றிவிடலாம் என்பதே இவர்கள் நோக்கம்.
இவர்கள் நோக்கம் ஒருபோதும் நிறைவறாது!
👍
❤️
🙏
14