Daily One Missionary Biography
Daily One Missionary Biography
February 18, 2025 at 12:52 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *பிப்ரவரி 18* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *ஹென்றி மார்ட்டின் Henry Martyn* 🛐 மண்ணில் : 18-02-1781 விண்ணில் : 16-10-1812 ஊர் : கார்ன்வால் நாடு: இங்கிலாந்து தரிசன பூமி : இந்தியா, பெர்சியா (நவீனகால ஈரான்) மாபெரும் தேர் ஊர்வலம் அது. மக்கள் கூட்டம் அலைமோதியது. தேர்ச் சக்கரத்தின் அடியில் சிறுவன் ஒருவன் விழுந்தான். சிறிது நேரத்தில் துடிதுடிக்க இறந்தான். சில நிமிடங்களுக்குள் பலர் தானாகவே அச்சக்கரத்தினுள் விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதயம் வேகமாய் துடிதுடிக்க அச்செயலை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்தான் 24 வயது நிரம்பிய ஒரு வாலிபன். இந்தியாவின் இதயங்களை கிறிஸ்துவுக்கு நேராக திசை திருப்ப, இங்கிலாந்திலிருந்து வந்த ஹென்றி மார்ட்டின் என்பவரே அந்த வாலிபர். கணவன் இறந்தவுடன் மனைவியும் எரிக்கப்படும் அகோரக் காட்சிகளையும் கண்டு ஆத்திரம் கொண்டார். மூடத்தனங்களினால் மக்கள் சிக்குண்டு இருப்பதைக் கண்டு வேதனை அடைந்தார். இதனை அகற்றும் வழி என்னவென சிந்திக்கலாயினார். வேதாகம புத்தகம் மட்டுமே இவர்களை மூடத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதை வில்லியம் கேரி அவர்கள் மூலம் அறிந்துகொண்டார். ஹிந்தி, உருது, வங்காளம் போன்ற மொழிகளைக் கற்று அம்மொழிகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டை உருது மொழியில் மொழிப்பெயர்த்தார். இஸ்லாமியர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். பள்ளிகளையும் ஆரம்பித்தார். அரேபிய மொழியில் வேதாகமத்தைக் கொண்டுவர அரும்பாடுபட்டார். சற்றும் ஓய்வில்லாமல் உழைத்ததால் அவர் உடல் பலவீனப்பட்டது. இந்தியாவிலிருந்து பெர்சியா சென்று பாரசீக மற்றும் அரேபிய மொழிகளில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். கால நிலைகள் அவர் உடலை முற்றிலும் காயப்படுத்தின. உள்ளத்திலோ உறுதியுடன் காணப்பட்ட இவர் தனது 31ம் வயதில் மரித்தார். இம்மாபெரும் மிஷனெரி இதே தினத்தில், என்றால் பிப்ரவரி 18ம் தேதி, பிறந்தார். 🚸 *அன்பரே! இளம் வயதில் இயேசுவுக்காக என்ன சாதனை புரிகிறீர்?* 🚸 🛐 *"ஆண்டவரே! என்னையும் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய இதோ அர்ப்பணிக்கிறேன். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603) ******* BenjaminForChrist @ +91 9842513842
❤️ 🙏 2

Comments