Daily One Missionary Biography
Daily One Missionary Biography
February 21, 2025 at 12:53 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *பிப்ரவரி 21* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *எரிக் ஹென்றி லிடெல் Eric Henry Liddell* 🛐 மண்ணில் : 16-01-1902 விண்ணில் : 21-02-1945 நாடு : சீனா தரிசன பூமி : சீனா ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள அர்மடேல் பட்டணம். அங்கு ஒர் சுவிசேஷக் கூட்டம். மக்கள் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் பேசப்போவது யார்? ஓட்டப் பந்தயத்தின் சாதனை வீரன் எரிக் லிட்டல் என்பவர் தான் அந்நாளின் பிரசங்கியார். 100 மீ. ஓட்டத்தில் உலக சாதனை செய்தவர். கிறிஸ்துவின் மீதுள்ள தன் பற்றை உலகம் அறிய வேண்டுமென ஆவல் கொண்டதோடு, தன் விசுவாசத்தையும், வெற்றியின் காரணத்தையும் மக்களிடம் பறைசாற்றிக் கொண்டிருந்தார். அந்த சாட்சி அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது. ஸ்காட்லாந்து மிஷனெரிப் பெற்றோரின் செல்ல மகனாக சீனாவில் பிறந்தார். எடின்பரோவில் கல்வி கற்றார். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவித்தார். விடா முயற்சியில் தொடர் வெற்றிகள் குவிந்தன. 1924ஆம் வருடம். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. அப்போட்டியில் பங்குபெற விரும்பிய அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 100 மீ. ஓட்டப் பந்தயத்திற்கான போட்டி, ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமையில் குறிக்கப்பட்டிருந்ததே அதற்குக் காரணம். உலகப் புகழா? தேவனுக்குக் கீழ்படிவதா? சாட்சியாய் இருக்க வேண்டுமா? காட்சிப் பொருளாய் மாற வேண்டுமா? மனதிலே போராட்டம். ஆண்டவரின் நாளில் ஆகாத காரியங்களில் ஈடுபட அவர் மனம் இசையவில்லை. சாட்சியாய் வாழ்பவர்கள் சாதிப்பார்கள். ஆம். எரிக் லிட்டல் சாதித்தார். 100 மீ. ஓட்டத்திற்கு பதிலாக மற்றொரு நாளில் நடந்த 400 மீ. ஓட்டத்தில் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார். உலக சாதனை புரிந்தார். கிறிஸ்துவின் போர் வீரராக சீனாவுக்கு மிஷனெரியாக சென்று அநேகரை இரட்சிப்பின் பாதையில் நடத்திய எரிக் லிட்டல் இதே நாள், என்றால் பிப்ரவரி மாதம் 21ம் தேதி, 1945ஆம் ஆண்டு தன் பூலோக ஓட்டத்தை முடித்தார். 🚸 *அன்பரே! சாட்சியான வாழ்வு வாழ இயேசு உங்களை அழைக்கிறாரல்லவா?* 🚸 🛐 *"ஆண்டவரே! உம்மைப் பின்பற்றி உமக்கு பணிசெய்து உந்தன் சாட்சியாய் என்றும் வாழ்ந்திடுவேன். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603) ******* BenjaminForChrist @ +91 9842513842
🙏 2

Comments