
Daily One Missionary Biography
February 25, 2025 at 01:30 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *பிப்ரவரி 25* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *ஜார்ஜ் விசார்ட் George Wishart* 🛐
மண்ணில் : 1513
விண்ணில் : 1546
ஊர் : மாண்ட்ரூஸ்
நாடு : ஸ்காட்லாந்து
தரிசன பூமி : ஸ்காட்லாந்து
16ம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து நாட்டில் டண்டி என்னும் இடத்தில் மரணத்துக்கேதுவான பிளேக் நே தொற்றிக் கொண்டது. மரண ஓலம் பெரும் சோகக் ஏற்படுத்தி மனிதர்களைக் கலங்கச் செய்தது.
அவர்கள் மரிக்கும் முன் இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பைப் பெற வேண்டாமா? அவர்களும் பரலோகம் செல்ல வேண்டுமல்லவா? பிரபல நற்செய்தியாளரான ஜார்ஜ் விசார்ட் இக்கேள்விகளால் மனம் உடைந்தார்; டண்டீ பகுதிக்கு விரைந்து சென்றார்; மரணத்தருவாயிலிருந்த மக்களின் பாவம் நீங்கச் செய்ய மன்றாடி ஜெபித்தார்; மன்னிப்பைப் பெற்றுத் தந்தார்; மகிழ்ச்சியான மரணங்கள் அங்கு நடந்தன; பலர் அற்புத சுகங்களையும் பெற்றனர்.
ஜார்ஜ் விசார்ட்டின் சிறந்த பிரசங்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில மக்கள் அவரை வெறுத்தனர். எனவே அவர்கள் அவரைக் கொல்லவும் திட்டமிட்டனர். மான்ட்ரோஸ் என்ற இடத்தில் அவரைக் கொல்லுவதற்காக சுமார் 60 எதிரிகள் ஒளிந்திருந்தனர். ஆனால் ஆவியானவர் அவர்களின் திட்டத்தை அபத்தமாக்கினார். ஜார்ஜ் விசார்ட் கடவுள் தன்னைக் காப்பாற்றிய விதங்களை எண்ணி மகிழ்ச்சியுற்றார்.
ஆயினும் ஜார்ஜ் விசார்ட் மீது 18 குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். கிறிஸ்துவை மறுதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தப்பட்டார். ஆனால் எவ்வித கொடுமைகளைக் கண்டும் அவர் மனம் தளரவில்லை. இறுதியாக அவரை கைது செய்து மரணதண்டனை விதித்தனர். மரணத்திற்கு முன்பாக இயேசுவை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிட்டு, எதிராளிகளை மன்னிக்கும்படி வேண்டினார். சற்று நேரத்தில் அவரை தீயிலிட்டு எரித்தனர். அவரது ஆவியோ மகிழ்ச்சியான இடம் நோக்கி விரைந்தது.
🚸 *அன்பரே! கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் உழைக்கவும் முன்வருவீரா?* 🚸
🛐 *"ஆண்டவரே! தளராத மனதையும், உறுதியான உள்ளத்தையும் எனக்கு தாரும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603)
*******
BenjaminForChrist @ +91 9842513842
🙏
1