
Daily One Missionary Biography
February 26, 2025 at 12:18 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *பிப்ரவரி 26* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *நாத்தான் பிரவுன் Nathan Brown* 🛐
மண்ணில் : 22-06-1807
விண்ணில் : 01-01-1886
ஊர் : நியூ இப்ஸ்விச், நியூ ஹாம்ப்ஷயர்
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : அசாம் (இந்தியா), ஜப்பான்
நமது தாய்மொழியிலேயே வேதாகமத்தை நம் கைகளில் கொண்ட நாம் எவ்வளவு பாக்கியவான்களாக இருக்கிறோம்! ஆனால் அத்தகைய பாக்கியமில்லாத அனேக மக்கள் உண்டு. அவர்களின் தேவைகளை சந்திக்க பல தேவமனிதர்கள் முன்வந்தார்கள்.
பாப்டிஸ்ட் மிஷனரியான நாத்தான் பிரவுன், அஸ்ஸாமிய மொழியில் தனது படைப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர். அமெரிக்காவின் நியூ இப்ஸ்விச்சில் பிறந்த அவர், மாசசூசெட்ஸின் வில்லியம்ஸ்டவுனில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், தனது 25 வயதில் மிஷனரி ஊழியம் செய்ய அவரது மனைவியுடன் பர்மாவுக்குச் சென்றார். அங்குள்ள மற்றொரு மிஷனரியான அடோனிராம் ஜட்சன் அவர்களுடன் சேர்ந்து, குறுகிய காலம் மொழிபெயர்ப்பு சேவையில் அவருக்கு உதவியாளராக இருந்தார். பின்னர் இந்தியாவின் அசாமில் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.
அப்போது அசாமிய மொழியில் இருந்த வேதாகமம் வில்லியம் கேரியால் மொழிபெயர்க்கப்பட்டதாக இருந்தது. அதில் பல பெங்காலி மற்றும் சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. எனவே தூய அசாமிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்க பிரவுன் முடிவு செய்தார். விளைவாக 1848ஆம் ஆண்டில் அசாமிய மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். அதே ஆண்டில், அசாமி இலக்கணம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், பல ஜெப புத்தகங்களை மொழிபெயர்த்தார், அசாமி-ஆங்கில அகராதியைத் திருத்தியுள்ளார் மற்றும் பல வரலாற்று மற்றும் கல்வி குறித்தப் படைப்புகளை வெளியிட்டார். அப்போது அங்கீகரிக்கப்படாத மொழியான அசாமி மொழியின் இலக்கிய படைப்புகளில் அவர் மேற்கொண்ட விரிவான முயற்சிகள், அந்த மொழி அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பெரும் பங்கு வகித்தன.
பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், அங்கு அடிமைத்தனத்தின் ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து நாட்டில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர போராடினார். 65 வயதில் மீண்டும் மிஷனரியாக பணியாற்ற நீண்ட பயணத்தை மேற்கொண்டார். ஜப்பான் நாட்டின் யோகோஹாமாவை அடைந்த அவர், அங்கு அந்த நாட்டிற்கு முதல் பாப்டிஸ்ட் மிஷனரியான ஜோனாதன் ஸ்கோபி அல்லது ஜொனாதன் கோபிள் என்று அழைக்கப்படும் மற்றொரு மிஷனரியுடன் சேர்ந்து பணியாற்றினார். அவர்கள் இருவரும் சேர்ந்து 1873ஆம் ஆண்டில் யோகோஹாமாவில் முதல் ஜப்பானிய பாப்டிஸ்ட் தேவாலயத்தை நிறுவினர். குறைந்த படித்தவர்களும் வேதாகமத்தை படிக்கும்படி, எளிமையாக படிக்கக்கூடிய முறையில் ஜப்பானிய வேதாகமத்தை கொண்டு வர பிரவுன் கடினமாக உழைத்தார். மீதமுள்ள தனது வாழ்நாள் முழுவதும் ஜப்பானில் ஊழியம் செய்த நாத்தான் பிரவுன், 1886ஆம் ஆண்டில் தனது சொந்த நாட்டிலிருந்து தொலை தூரத்தில் அதே ஜப்பான் நாட்டில் மரணமடைந்தார்.
🚸 *பிரியமானவர்களே, ஆண்டவருடைய வார்த்தையை மற்றவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவர உங்கள் ஞானத்தைப் பயன்படுத்துவீர்களா?* 🚸
🛐 *"ஆண்டவரே! கல்வியறிவற்றவர்கள் கூட புரிந்துகொள்ளும் விதத்தில் உமது வார்த்தையை விளக்கும்படி எனக்கு கிருபை தாரும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
1