
Hindu Munnani - Tamilnadu
February 19, 2025 at 09:27 AM
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கொடி பிடிக்கும்
கேரளத்து கம்யூனிஸ்ட்டுகள்!!
இந்துக்கள் சிறுபான்மை ஆவதால், கேரளாவில் அதிகரிக்கும்
தேசத்திற்கு எதிரான சம்பவங்கள்!!
மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
ஹமாஸ் தீவிரவாதிகள் பெண்களையும், குழந்தைகளையும் பணயக் கைதிகளாக வைத்து போர் புரியக்கூடிய மனிதாபிமான அற்ற தீவிரவாதிகள் ஆவார்கள். அவர்களின் செயல் உலகமே வெறுக்கக்கூடிய அளவில் உள்ளது. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இஸ்லாமியர்களும் கம்யூனிச சித்தாந்தம் கொண்டவர்களும் தீவிரவாதிகளின் உருவப்படத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். இது இந்த தேசத்திற்கு ஆபத்தான விஷயமாகும்.
அங்கு ஆட்சி செய்யக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டு கொள்வதில்லை, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸும் கண்டு கொள்வதில்லை. கேரளா மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மை ஆவதால் இது போன்ற தேசத்திற்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுகிறது. இவர்கள் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது...
#hamas #kerala #centralgovt #communists #hindumunnani

👍
😢
😡
✅
❤️
16