
Hindu Munnani - Tamilnadu
February 19, 2025 at 01:19 PM
திருப்பரங்குன்றத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதே,
ஆளும் கட்சியான திமுக தான்...
இந்துக்கள் மீது வீண் பழிபோடும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்பதை அவரது செயல்களே காட்டுகிறது..
திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழி பலியிடபோவதாக முஸ்லிம் அமைப்பினர் சென்றனர். அதனை ஆதரித்து திமுக மணப்பாறை திமுக எம்எல்ஏ அப்துல் சமது சென்று அது சிக்கந்தர் மலை என்றார். இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையே வக்ஃப் வாரிய சொத்து என்றார். மலையின் புனிதத்தை கெடுத்து மதப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றே அசைவம் சாப்பிட்டார்கள். அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்தவர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு. அந்த மலையையும் கோவில்களையும் நிர்வாகம் செய்வது இவரது துறை அதிகாரிகள் தானே.
அமைச்சர் என்கிற முறையில் சேகர்பாபு தலையிட்டு அந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏதாவது செய்தாரா? இல்லையே. தன்னுடைய பொறுப்பில் இருக்கும் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தன் ஆதரவாளர்களுடன் சென்று ஆதரவாளர்களை பிரியாணி சாப்பிட வைத்ததை கண்டிக்காத அமைச்சர். வெளியூரிலிருந்து வந்து ஆடு வெட்டுவேன் கோழி வெட்டுவேன் என்று கூட்டமாக வந்த இஸ்லாமிய அமைப்புகளை கண்டிக்காதவர் இந்த அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு.
ஆனால் கோவிலின் புனிதத்தை காக்க, அது வக்ஃப் வாரிய சொத்து இல்லை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முருகனுக்கு சொந்தமான மலை. இதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி பேரியக்கத்தின் தலைமையில் ஒன்று கூடிய முருக பக்தர்கள் தான் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லும் அமைச்சர் சேகர் பாபுவின் உள்நோக்கம் வெளிப்படுகிறது.
முருகனின் திருப்பரங்குன்றம் மலையில் நடக்கின்ற பிரச்சனைக்கு தீர்வு காண இவ்வளவு நாட்கள் ஆகியும் தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்கிற முறையில் ஒருமுறை கூட நேரில் சென்று பார்வையிடவில்லை இவர். பிரச்சினையை ஏற்படுத்திய திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினரை முதல்வர் கண்டிக்கவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவர் சேகர் பாபு என்பது இவரது செயல்பாடு வெளிப்படுத்துகிறது.
திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை பாதுகாக்க தமிழக ஆளும்கட்சி தவறினால் முருக பக்தர்கள் பாதுகாக்க முன்வருவார்கள் என்பதை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்...
#sekarbabu #thiruparankundramtemple #dmk #hrce #hindumunnani
👍
🙏
🚩
✅
👌
24