
Hindu Munnani - Tamilnadu
February 22, 2025 at 12:00 PM
இந்தியாவில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த,
அந்நிய நாடுகளின் தொடர் சதி!!
மறைமுகமாக துணைப்போகும் சில அரசியல் கட்சிகள்..
உத்தரபிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் நடந்த கலவரத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்றும், இக்கலவரத்திற்கு ஐக்கிய அமீரகத்தின் சாரிக் சதா என்பவர்தான் மூல காரணம் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
உத்தரபிரதேச மாநிலம், #சம்பல் பகுதியில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் #ஷாஹி ஜமா #மசூதி, கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், மசூதியில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தச்சென்ற போது பெரும் கலவரம் ஏற்பட்டு 5 நபர்கள் சுடப்பட்டனர்.
இதுகுறித்து நீதிபதி அர்ச்சனா சிங்கிடம் 4,400 பக்க #குற்றப்பத்திரிகையை, போலீஸ் அதிகாரி குல்தீப் குமார் மற்றும் மாவட்ட அரசு வழக்கழிஞர் ஹரி ஓம் பிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.
இதில் சம்பல் பகுதியில் நடந்த கலவரத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்றும் இக்கலவரத்திற்கு ஐக்கிய அமீரகத்தின் சாரிக் சதா என்பவர்தான் மூல காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்திய தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக வேலை செய்வதற்காக 21 மில்லியன் அமெரிக்கன் டாலர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆவணத்தை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தியாவிற்குள் கலவரத்தை ஏற்படுத்த பல அந்நிய நாடுகள் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இங்குள்ள சில அரசியல் கட்சிகளும் மறைமுகமாக துணை போகின்றன. பாரதத்திற்கு எதிராக இதுபோல் செயல்படும் சக்திகளை விரைவில் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்...
#sambhalviolence | #uae | #uttarpradesh | #hindumunnani |
😢
👍
✅
❤️
🔥
😡
🙏
14