Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 23, 2025 at 08:33 AM
கிறிஸ்தவத்தில் சமத்துவம் என்பது மாயமான்!! திருச்சி மாவட்டம், திருவெரும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் புனித மேரி மகதலின் கத்தோலிக்க சர்ச் உள்ளது. இது கடந்த 1937 ஆம் ஆண்டில் உருவாக்கபட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சில் கொண்டாடபடும் விழாக்கள், விருந்துகள், மேரி மகதலின் சப்பரம் போன்ற நிகழ்ச்சிகளில் பட்டியல் சமூக கிறிஸ்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. பட்டியல் சமூக கிறிஸ்தவர்களின் விழாக்கால பங்கு தொகை கூட வாங்க மறுக்கிறார்கள். பட்டியல் சமூக கிறிஸ்தவர் இறந்தால், அவரது உடலுக்கு சர்ச்சுக்கு உள்ளே வைத்து சடங்கு கூட நடத்துவதில்லை என்பதுடன் பொதுவான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவும் விடுவதில்லை. தினப்படி வழிபாடு மற்றும் விழாக் காலங்களில் பட்டியல் சமூக கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு வெளியே நின்றுதான் வழிபட வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளை களைய வேண்டும் என்று அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி முடித்து வைக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கை மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துகொண்டு தமிழக அரசு மற்றும் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தினர் பதில் அளிக்க உத்திரவிட்டுள்ளது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளை கைப்பற்றிய கிறிஸ்தவர்கள், அவர்களுக்கென தனியாக அடிமை பைபிள் என்று உருவாக்கி, எஜமான விசுவாசத்தை பைபிள் மூலம் போதித்தார்கள். அந்த வகையில் ஆள் பிடிக்கும் அல்லது நாடு பிடிக்கும் உத்திதான் மதமாற்றம். அதற்கு எந்த நாடும் விலக்கல்ல இந்தியாவும் விலக்கல்ல. ஆப்பிரிக்காவில் மதமாற்ற அடிமை பைபிள் புகுத்தியவர்கள் நம் நாட்டில் சமூக சீர்கேட்டால் ஏற்பட்ட ஜாதிய கட்டமைப்பை வைத்து மதம் மாற்றினார்கள். சமத்துவம் சகோதரத்துவம் பாகுபாடு இல்லை என கூறி மதம் மாற்றியவர்களால் ஒரு கிராமத்தில் கூட 1937 முதலாக இன்று வரை அவர்கள் கூறிய சமத்துவத்தை கொண்டுவர முடியவில்லை. அந்த வகையில் கிறிஸ்தவம் கூறும் சமத்துவம் ஒரு மாய மான். ஆனால் ஹிந்து தர்மம் ஜாதிய பாகுபாடு என்ற சமூக சீர்கேட்டை படிப்படியாக களைந்து இன்று அரசியல், சமூகம் மற்றும் கல்வி என அனைத்து தளங்களிலும் சம வாய்ப்பு, சமூக ஒற்றுமை ஏற்படுத்தி களங்கத்தை துடைத்தெரிந்து விட்டது. ஆகவே மதமாற்றம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்பதையும் கிறிஸ்தவத்தில் சமத்துவம் என்பது மாயமான் என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும். சமத்துவமும் சகோதரத்துவமும் இறக்குமதி பொருள் அல்ல, இறக்குமதி செய்யப்பட்ட மதம் ஒருபோதும் அவற்றை தராது என்பதை உணர்ந்து தடம் மாறி, மதம் மாறி போனவர்கள் தாய் மதம் திரும்ப வேண்டும்... #christianity #banconversion #சாதிய_பாகுபாடு #மதமாற்றம் #இந்துமுன்னணி
😡 🙏 4

Comments