Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 28, 2025 at 08:38 AM
அரசியல் சட்டத்தை மிதிக்கும் கம்யூனிஸ்ட் எம்பி சச்சிதானந்தம்!! நக்சலைட் போல் நடந்து கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள்... வீட்டுச் சிறையில் இருக்கும் கம்யூனிஸ்ட் நிர்வாகியை, கம்யூனிஸ்ட் எம்பி சச்சிதானந்தம், சட்டத்தையும், காவல்துறையினரையும் மீறி, மீட்டுச் செல்லும் அவலம்!! சென்னையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக காவல்துறையினர், திண்டுக்கல் அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவர் பாப்பாத்தியை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். வீட்டுச் சிறையில் வைத்த பாப்பாத்தியை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் காவல்துறையுடன் சண்டை போட்டு மீட்டுச் சென்றுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீட்டுச் சிறையில் இருந்த பொழுது சட்டத்தை மதித்து நடந்துகொண்டனர். கம்யூனிஸ்ட் தலைவரை வீட்டுச் சிறையில் வைக்கும் பொழுது ஒரு எம்.பி சட்டத்தை மீறி, காவல்துறையை மீறி மீட்டுச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக மக்கள் பிரதிநிதி போல் அல்லாமல் நக்சலைட்டல்களைப் போல் நடந்து கொள்கிறார்கள்... #dindigulmp #sachithanantham #cpim #madharsangam #housearrest #hindumunnani
😡 🔥 🙏 4

Comments