Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
March 1, 2025 at 10:32 AM
ஒரு மதத்திற்கு மட்டும் சலுகை காட்டும் பாரபட்ச திமுக அரசு!! இஸ்லாமியர்கள் என்றால் சட்டம் கூட வளைந்து கொடுக்கிறது.. இஸ்லாமிய அரசு ஊழியர்கள் நோன்பு முடிப்பதற்காக, அரசு அலுவலகப் பணி நேரத்தில் மாலை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு ஒரு மணி நேரம் முன்னதாக செல்ல அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை... இவ்வாறு இஸ்லாமிய அரசு ஊழியர்களின் பணி நேரம் குறைக்கபடுவதால் மற்ற ஊழியர்களின் பணிச்சுமை கூடும் அதனால் மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள். மேலும் மக்களுக்கு சேவை பெறுவதில் தாமதமும் அலைக்கழிப்பும் ஏற்படும் சூழல் உள்ளது. இந்துக்களின் விரத நாட்களான சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி போன்ற நாட்களுக்கு இதுபோன்ற பணிச்சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு ரம்ஜான் பண்டிக்கைக்கு மட்டும் சலுகை வழங்குவது அரசு ஊழியர்களிடையே மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் மோசமான செயலாகும். இந்த திமுக அரசு, இந்து பண்டிகைகளுக்கு சலுகை அளிக்குமா..? அரசு நிர்வாகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதையே திமுக ஆட்சியின் குறிக்கோளாக கொண்டு செயல்படும் சுல்தான் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் இத்தகைய போக்கு வியப்புக்குரியது இல்லை என்றாலும் பணியாளர்களிடையே மதரீதியாக பிரிவினையை உண்டாக்கும் செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, உடனடியாக மேற்படி உத்தரவை ரத்து செய்யவேண்டும்... #ramzan #அரசுஊழியர்கள் #cmstalin #hindumunnani
😡 👍 8

Comments