
TN Fact Check, Govt. of Tamil Nadu
February 19, 2025 at 10:29 AM
PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று அண்ணாமலை சொன்ன தவறான தகவல்.
PM SHRI நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. (திட்டத்தின் மொத்தத் தொகை - ரூ27,360 கோடி, ஒன்றிய அரசு பங்கு ரூ18,128 கோடி)
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். இத்திட்டத்துக்கான ஒன்றிய அரசின் 60% பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022 - 2023 முதல் 2026 - 2027 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
PM SHRI பள்ளிகளுக்கு முழு நிதியும் ஒன்றிய அரசு வழங்குகிறது, இத்திட்டத்தின் கீழ் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல்.
👍
❤️
👌
😂
15