
minnalvegakanitham
February 18, 2025 at 04:53 PM
210) ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (8th New Book) (23-07-2023 TNPSC)
a. 5 லிட்டர்
b. 10 லிட்டர்✔
c. 15 லிட்டர்
d. 25 லிட்டர்
211) ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? [08-10-2022]
(A) 1000 வாக்குகள்
(B) 1050 வாக்குகள்
(C) 1100 வாக்குகள்
(D) 1200 வாக்குகள்✔
212) கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ₹1200க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க? (14-09-2024 TNPSC)
அ) ₹15000✔
ஆ) ₹16000
இ) ₹14000
ஈ) ₹15500
213) ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க? (09-11-2024 TNPSC)
அ) 100
ஆ) 150
இ) 200
ஈ) 300✔
214) பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க? (7th New Book)
a. 400
b. 500
c. 600✔
d. 700
215) கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க?
a. 7%✔
b. 8%
c. 9%
d. 10%
❤️
😟
😢
🙏
4