BJP Tamil Nadu
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                February 28, 2025 at 03:21 AM
                               
                            
                        
                            கழிவறையிலும் தங்கள் ஊழல் கைவரிசையைக் காட்டிய @arivalayam அரசு! 
தமிழகத்தில் ஜனவரி 2022-இல் ₹3.18 ஆக இருந்த ஒரு பொது கழிவறையின் பராமரிப்பு செலவு, செப்டம்பர் 2022-இல் ₹363.9 ஆக உயர்வு அதாவது எட்டு மாத காலத்திற்குள் சுமார் 115 மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், “ஒரு கோடிப்பே, ஒரு கோடி” என்ற சினிமா வசனத்தைத் தான் நமக்கு நினைவூட்டுகிறது. 
அதாவது கறைபடிந்த, தரை பெயர்ந்த ஒரு கழிவறைக்கு, தண்ணீரும் தாழ்ப்பாளும் இல்லாமல் வீச்சமெடுக்கும் ஒரு கழிவறைக்கு பராமரிப்பு செலவு மட்டும் 363 ரூபாயா? கொள்ளையிலும் கொள்ளை இது ஊழலில் கொழுத்த அறிவாலயத்தின் பகல் கொள்ளை.
சுமார் ₹430 கோடி செலவில் துவங்கப்பட்ட இந்த நவீன கழிப்பிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரைவார்த்த சென்னை மாநகராட்சி(GCC), 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, சேதாரமற்ற கழிவறை கதவுகள் மற்றும் தரைகள், கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள், 24 நேரமும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட 26 விதிமுறைகளுக்குட்பட்டு பராமரிப்பு பணிகள் தடையின்றி நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ததா?
எப்படிப்பார்த்தாலும் ஒரு கழிவறையை பராமரிக்க ₹300-க்கும் அதிகமாக செலவழிப்பது என்பது மிக அதிகத்தொகை என்பது GCC-க்கு தெரியாதா? அல்லது முதல்வர் திரு. @mkstalin உள்ளிட்ட அறிவாவாலய தலைவர்களுக்கு நெருக்கமான நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் சென்னை மேயர் திருமதி. @PriyarajanDMK எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதி காக்கிறாரா?
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👌
                                        
                                    
                                        
                                            😡
                                        
                                    
                                        
                                            💦
                                        
                                    
                                        
                                            🕉️
                                        
                                    
                                        
                                            😠
                                        
                                    
                                        
                                            😨
                                        
                                    
                                    
                                        51