YouTurn
February 26, 2025 at 11:37 AM
முதல்வர் மருந்தகம்’ பற்றிய அண்ணாமலையின் பொய்: மலிவு விலை மருந்தகங்கள் என்னும் திட்டம் இந்திய அளவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு முதல் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மலிவு விலை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இவை பின்னாளில் ’அம்மா மருந்தகம்’ என்றும் தற்போது ’முதல்வர் மருந்தகம்’ என்றும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து மோடிதான் மலிவு விலை மருந்தகம் என்னும் திட்டத்தைக் கண்டுபிடித்து இந்தியாவில் அமல்படுத்தியதாகத் தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை பொய்யான தகவலை மேடையில் பேசுகிறார். Proof : https://youturn.in/articles/is-pmbjp-scheme-pioneer-for-muthalvar-marunthagam-scheme.html
👍 9

Comments