Raj Bhavan, Tamil Nadu

24.5K subscribers

Verified Channel
Raj Bhavan, Tamil Nadu
February 22, 2025 at 05:05 PM
காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ் புண்ணிய பூமிக்கு வருகை தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நடத்துவோருக்கு உதவும் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் இடம்பெற்ற ஒரு பெரிய குழுவை வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை இல்லாத மிகப்பெரிய சனாதன விழாவில் பங்கேற்க நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து தினமும் இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது, ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் மறக்க முடியாத அனுபவமாகும். இது ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மிகவும் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். திரிவேணி சங்கமத்தில் புனித மஹாகும்ப ஸ்நானம் செய்த பிறகு அவர்கள் காசிக்குச் சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வார்கள். மேலும் அயோத்தி தாமில் ஸ்ரீ பால ராமரையும் தரிசிப்பார்கள். நமது தேசிய ஒற்றுமையின் இந்த உணர்வு நீடூழி வாழ்க!
Image from Raj Bhavan, Tamil Nadu: காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ் புண்ணிய பூமிக்கு வருகை...
🙏 👍 ❤️ 10

Comments