Coimbatore Weatherman
February 26, 2025 at 12:51 AM
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வானிலை அறிக்கை பிப்ரவரி 26 2025: அனைவருக்கும் காலை வணக்கம். கொங்கு மண்டலத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை ஒரு சில இடங்களை ஒதுக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும் இருக்கலாம். கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உண்டு. தென் தமிழகம், டெல்டா, இலங்கை மற்றும் தெற்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
👍 ❤️ 🙏 👏 👌 😢 🤝 64

Comments