Makkal Needhi Maiam
February 18, 2025 at 03:35 PM
மக்கள் நீதி மய்யம் எழும்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, எழும்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் ஆகியோரின் தலைமையில், எழும்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K. சீனிவாசன், நகரச் செயலாளர் திரு. S. ராமச்சந்திரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தரவு மற்றும் ஆய்வு மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. E.வெங்கடேஷ்வரி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன் மற்றும் எழும்பூர் மாவட்டத்தின் நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவை விமரிசையாகக் கொண்டாடுவது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
#kamalhaasan
#makkalneedhimaiam
#8ம்ஆண்டில்_மய்யம்
#makkalneedhimaiam_8thyear
❤️
👍
5