உணவே மருந்து (JJ Healthy Foods)
உணவே மருந்து (JJ Healthy Foods)
February 22, 2025 at 10:13 AM
*மருந்து குழம்பு செய்முறை: 🌼வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட வாயு,கை கால் குடைச்சல், கெட்ட கொழுப்பு, வயிறு மந்தம், வயிறு மக்கு, காற்று பிரியும் பொழுகு துர்நாற்றம் வீசுதல், வயிறு ஊதல், பசியின்மை, நெஞ்சு சளி போன்றவை குணமாகும், வாரம் தோறும் சாப்பிட வயிறு மற்றும் உடல் சுத்தமாகி நரம்புகள் முறுக்கேறும். இது நமது பாரம்பரியமான குழம்பு. குழந்தை பெற்று எடுதவர்கள் உண்ண பழைய தெம்பு பெலன் கிடைக்கும் . 🌼மூலிகை பொருள்கள்: ✍️சுக்கு - இரண்டு துண்டு ✍️மிளகு - 2 டீஸ்பூன் ✍️ அரிசி திப்பிலி - சிறிதளவு ✍️அதிமதுரம் - 2 துண்டு, ✍️சித்தரத்தை - 2 துண்டு, ✍️சீரகம் - 2 டீஸ்பூன், ✍️சத்தகுப்பை - 2டீஸ்பூன், ✍️தனியா - 3 டீஸ்பூன், 🌼தாளிப்பு பொருள்கள்: ✍️பூண்டு - 25 பல், ✍️கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, ✍️புளி - சிறிதளவு, ✍️மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன், ✍️கல்உப்பு - தேவையான அளவு ✍️நல்லெண்ணெய் - 50ml மேற்கண்ட மூலிகைகள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். எதையும் பொடியாக வாங்காமல் அப்படியே வாங்கி பயன்படுத்துவதுதான் நல்லது. 🌼வாணலியில் எண்ணெய் விடாமல் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை அனைத்தையும் தனித்தனியாக இலேசாக வறுக்கவும்.அதை மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும். இதை தனியாக வைத்துகொள்ளுங்கள். தனியா, சீரகம், மிளகு மூன்றையும் வறுத்து பொடிக்கவும். 🌼கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு, உளுந்து, பூண்டு, கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்,புளியின் பச்ச வாசனை போக கொதிக்க வைத்து அரைத்த பொடி அனைத்தையும் தூவி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 🌼சுக்குவின் மணம் மணக்க மணக்க குழம்பு தயார். மருந்து பொருள்கள் சேர்த்ததால் மணம் இல்லாமல் ருசி இல்லாமல் இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். வெகு ருசியாக இருக்கும்.அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கன ருசியும் தொண்டையில் காரமும் தெரியும். * பகிர்வு பதிவு : Varmakalai Gurukulam பக்கத்தில்லிருந்துங்க. 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

Comments