Anbil Mahesh Poyyamozhi
February 3, 2025 at 03:43 AM
தமிழர்களுக்கு அரசியல் பயிற்றுவித்த பேரறிஞர் #அண்ணா அவர்களின் நினைவு நாள்.
தாழ்ந்து கிடந்த தமிழினத்திற்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை கற்பித்து, ஆதிக்கத்துக்கு எதிராக போராட வைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கழக முதன்மைச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களோடு இணைந்து திருச்சி சிந்தாமணியில் அமைந்துள்ள பேரறிஞர் அவர்களின் திருவருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள திராவிடத் தலைவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அண்ணாவின் புகழ் ஓங்குக!
❤️
6