Anbil Mahesh Poyyamozhi
February 5, 2025 at 09:45 AM
மலபார் சாரிடபிள் ட்ரஸ்ட் சார்பில் நம்முடைய அரசுப்பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 411 அரசுப்பள்ளிகளில் பயிலும் 3,511 மாணவியருக்கு உயர்கல்விக்காக ரூ.2.8 கோடி அளவிலான உதவித்தொகை வழங்கவிருப்பதை தொடங்கி வைத்து, முதல்கட்டமாக சென்னையைச் சேர்ந்த 797 மாணவியருக்கு வழங்கி, வாழ்த்தினோம்.
நம்முடைய #திராவிட_மாடல் அரசின் அழைப்பை ஏற்று, மலபார் குழுமம் போல ஏராளமான நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு உடன் நிற்க முன்வந்துள்ளதை சுட்டிக்காட்டி, அந்த வாய்ப்புகளை மாணவச் செல்வங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
❤️
🙏
13