
Anbil Mahesh Poyyamozhi
February 7, 2025 at 09:39 AM
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வைரவிழாவில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் T M Anbarasan அவர்களோடு இன்றைய தினம் கலந்து கொண்டோம். வைரவிழா நினைவு கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தோம்.
60 ஆண்டுகால இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்ததோடு, கல்வி - விளையாட்டு, 'மகிழ் முற்றம்' போன்ற செயல்பாடுகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினோம்.
"அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி, அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்தும் பணியில் முதலிடத்தில் இருப்பவை நம்முடைய அரசுப்பள்ளிகள் தான்" என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.

❤️
🙏
👍
11