
Anbil Mahesh Poyyamozhi
February 12, 2025 at 05:08 PM
"எங்கும் அறிவியல் யாவும் கணிதம்" என்ற சிந்தனையோடு 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்துவரும் 'வானவில் மன்ற'த்தின் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி - 2025ஐ சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தோம்.
அங்கு மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த நிலையில், அவை ஒவ்வொன்றையும் பார்வையிட்டு, செயல்முறைகளை கேட்டறிந்தோம்.
தங்களது சுய அனுபவத்தில் இருந்தும், கற்றலால் மேலோங்கிய ஆர்வத்தினாலும் உருவாக்கிய படைப்புகளை மாணவச் செல்வங்கள் திறம்பட விளக்கியது பூரிப்படையச் செய்தது. அறிவியல் மனப்பான்மையை பல்கிப்பெருகச் செய்ய வேண்டும் என்ற வானவில் மன்றத்தின் நோக்கம் சரியான பாதையில் பயணிப்பதை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.

❤️
👍
🙏
11