காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 3, 2025 at 05:55 AM
*🙏இன்று 03:02:2025 தை மாத வளர்பிறை சஷ்டி...*🌹🙏 *முருகனுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானதாகும். சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மணமாலை சூடும் வாய்ப்பு உருவாகும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.* *சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும்.* *அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.* *சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.* *வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.* *சஷ்டி விரதமுறை :* *சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு பூஜையறையில் முருகன் படத்துக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன்பின் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.* *சஷ்டி விரதம் இருப்பவர்கள்* *காலை முதல் மாலை வரை* *தண்ணீரை தவிர உணவு எதுவும்* *அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.* *காலை, மாலை இருவேளையும் முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்வது சிறப்பு. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.* *தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் அத்துடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பூஜையில் தேங்காய் உடைத்து இருபுறமும் வைக்க வேண்டும்.* *முருகனுக்கு இஷ்ட நைவேத்தியமாக அவல் உணவுகள் வைக்கலாம். பின்பு முருகனுக்கு தீப, தூப ஆராதனை காண்பித்து பூஜையை முடித்து கொள்ளலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம். சஷ்டி தினத்தில் வீட்டில் கந்த சஷ்டி கவசம் ஒலிப்பதும், படிப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.* *குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்தசஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.* *இதுபோல் ஒவ்வொரு மாதமும் சஷ்டி தினத்தன்று முருகனுக்கு பூஜை செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எல்லாம் ஈடேறும். சுப காரியங்கள் கைகூடும்.* *சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை:* *சஷ்டி திதியன்று முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவது மிகவும் முக்கியம்.* *முருகப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு செய்வதற்காக நல்லெண்ணெய் வாங்கித் தர வேண்டும்.* *முருகப்பெருமானின் கற்பகிரகத்தில் இருக்கும் விளக்கிற்கு தீபம் ஏற்றுவதற்காக சுத்தமான பசு நெய் வாங்கித் தர வேண்டும்.* *முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை வாங்கித் தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை நம்மால் பெற முடியும்.* *விரத பலன்கள் :* *சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.* *ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.* *பொருளாதாரத்தில் உள்ள கஷ்டநிலை நீங்கும்.* *தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.* *குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.* *கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழிபிறக்கும்.* *🙏நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.💐🌷🌹🙏* *🦚 முருகா சரணம்🦚*

Comments