Journalist Aashik Signature
Journalist Aashik Signature
February 6, 2025 at 06:09 AM
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீனிய பிரதிநிதி ரியாத் மன்சூர் கருத்துரை வழங்கும் போது : "காசா பகுதி பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமானது. அதை ஆக்கிரமிக்க எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை. காசா மண்ணில் நிலைத்திருப்பது பற்றி தீர்மானிப்பது மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீன மக்களுக்குரிய விடயமாகும். நாங்கள் தீர்மானிக்க வேண்டிய எமக்குரிய விவகாரத்தில் எங்களுக்கு ஆணையிட யாருக்கும் உரிமை இல்லை." "காசாவை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் உறுதியாக இருக்கிறோம், பாலஸ்தீனியர்கள் காசாவில் நிலைத்திருப்பதில் உறுதியாக உள்ளனர்" என்று மன்சூர் மேலும் கூறினார். அவர் மேலும் கேள்வி எழுப்பினார் : "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்ற தங்கள் தாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறுபவர்கள் இருக்கிறார்கள், அப்படியானால் பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தைப் பற்றிக் கொள்ளும் உரிமையை ஏன் அவர்கள் வெறுக்கிறார்கள்?" https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
Image from Journalist Aashik Signature: ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீனிய பிரதிநிதி ரியாத் மன்சூர் கருத்துரை ...
😮 1

Comments