
Journalist Aashik Signature
1.3K subscribers
About Journalist Aashik Signature
Updates News
Similar Channels
Swipe to see more
Posts

சங்கிகளின் தேசபக்தி. 'பாக்' னு பெயர் கூட இருக்கக் கூடாது! மைசூர்பாக்.. இனி மைசூர் ஸ்ரீ! *அப்ப..பாக்குக்கு என்னடா பெயர் வைப்பீங்க.* ஸ்ரீ குவா?? 'லால்பாக்' இனிமேல் லால்ஸ்ரீ. 'கரோல்பாக்' இனிமேல் கரோல்ஸ்ரீ. ' பாக்கியஸ்ரீ' இனிமேல் ஸ்ரீயஸ்ரீ. # *பா'கிஸ்'தானில் கிஸ் இருப்பதால் இனி முத்தம் கொடுக்க மாட்டோம் என யாராவது கிளம்புவார்களோ* 🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤦♀️🤦♀️🤦♀️🤣🤦♀️🤣 https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r


🌳 `இரட்டை முகம்:` 🌳 *பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் 0%, ஆனால் பிரதிநிதி குழுவில் 16%* பஹல்காமில் நடந்த துயரமிக்க பயங்கரவாதத் தாக்குதல், உலக சமூகத்திற்கு முன் பயங்கரவாதத்தின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை, சர்வதேச அளவில் அம்பலப்படுத்தவும் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் மோடி நிர்வாகம் இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளடங்கிய 59 உறுப்பினர்களை கொண்ட குழு _ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு_ செல்ல திட்டமிட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த நடவடிக்கை தேச ஒற்றுமை, தொலைநோக்கு கொண்ட இராஜதந்திர நகர்வாகவும், பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகத் தெரிகிறது. ஆனால், கூர்ந்து கவனித்தால், `ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சமத்துவத்தை குறைத்து மதிப்பிடும் ஒரு முரண்பாடு` இதில் வெளிப்படுகிறது. *_"சப்கா சாத்" (அனைவருடன் சேர்ந்து)_* என்ற முழக்கத்துடன் சர்வதேச அரங்கத்திற்கு செல்லக்கூடிய 59 உறுப்பினர்களில் *_10 முஸ்லிம் பிரதிநிதிகள் (16% பிரதிநிதித்துவத்தில்)_* செல்கின்றனர். ஆனால், பாஜக அமைச்சரவையில் *_நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ ஒரு முஸ்லிம் கூட இல்லை_*. * *ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முஸ்லிம்கள் தகுதியானவர்கள் என்றால், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்கள் ஏன் இல்லை?* * *சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்பியதில் சம பங்கு கொண்டிருந்த முஸ்லிம் சமூகம், தற்போது மத்திய அமைச்சரவையில் 0% பிரதிநிதித்துவத்தை தந்துள்ளது ஓரவஞ்சனை அல்லவா?.* இது பாஜக அரசின் உள் முரண்பாடுகளையும் வெளிப்புற முரண்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. *Source: Editorial, Muslim Mirror* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r


*கீழடி* *ஒரு வேலை அங்கே தேவநாகரி எழுத்து கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்* *இந்து தினமணி தினமலர் உள்ளிட்டவை புகழ்ந்து எழுதி இருக்கும்* *சர்வதேச ஊடகம் வரை கொண்டு சென்றிருப்பார்கள்* *வட இந்திய ஊடகங்களில் விவாதம் கொடிகட்டி பறந்திருக்கும்* *இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கருத்தரங்கங்கள் நடத்தி இருப்பார்கள்* *இந்தியாவின் பூர்வ குடியில் நாங்கள் தான் என்று எக்காலமிட்டு இருப்பார்கள்* ...https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r/1949

*🔹🔸“தமிழர்களின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுப்பதை போல தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் ஒன்றிய அரசு மறைக்க முயற்சிக்கிறது!”* *-உலக தமிழராய்ச்சி நிறுவன தலைவர் ஆர். பாலகிருஷ்ணன்!* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r/1949

*பிளஸ் 2 முடித்தவர்கள் கவனத்துக்கு... உயர் கல்விக்கு விண்ணப்பிக்க முழுமையான வழிகாட்டுதல்* பிளஸ் டூ படித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது குறித்த தகவல்களைப் புரட்டிப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட வழக்கமான படிப்புகளைத் தாண்டி பல புதிய படிப்புகளும் வந்துவிட்டன. அப்படி பல்வேறு உயர் கல்வி படிப்புகளுக்கான விண்ணப்ப முறை, கடைசி தேதி போன்ற விவரங்களை அறிய: 1. *அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் (TNEA):* தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்குப் பதிவு செய்யும் முறை முழுமையாக இணைய வழி விண்ணப்பப் பதிவாகவும், இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமைந்துள்ளது. எனவே பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் அல்லது 1800-425-0110 என்கிற உதவி எண்ணை அழைக்கலாம். கடைசி தேதி: 06.06.2025 | இணையதளம்: https://www.tneaonline.org 2. *அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் (TNGASA):* தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ஒருங்கிணைந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம். | கடைசி தேதி: 27.05.2025 | இணையதளம்: https://www.tngasa. 3.*அரசு, தனியார் வேளாண் தொடர்புடைய கல்லூரிகள் (TNAU):* மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 தொகுதிக் கல்லூரிகள், 28 இணைந்த கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு,வேளாண் வணிக மேலாண்மை, இளம் தொழில்நுட்பம் பிரிவில் வேளாண் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய 12 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடைசி தேதி: 08.06.2025 | இணையதளம்: https://tnau.ac. 4.*அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் - டிப்ளமோ படிப்புகள்:* தமிழ்நாட்டில் உள்ள 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 414 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள், 12 தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்பு பெற்ற கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கடைசி தேதி: 23.05.2025 | இணையதளம்: https://tnpoly.in/ 5.*அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (TNDALU):* சீர்மிகு சட்டப் பள்ளி (School of Excellence in Law), இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் (Affiliated Law colleges)வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தனித்தனி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், ஏனெனில் பல்கலைக்கழகம் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி தகுதி பட்டியலை வெளியிடும். (இருப்பினும், B.A.LL.B.(Hons.), BBA.LL.B.(Hons.)க்கு விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம் போதுமானது). இணைவுப்பெற்ற அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 31.05.2025 | இணையதளம்: https://www.tndalu.ac.in 6.*அரசு கவின்கலைக் கல்லூரிகள்:* காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகியன சென்னையில் உள்ள கவின்கலை கல்லூரியில் கற்றுத் தரப்படுகின்றன. இதில் முதல் 3 படிப்புகள் கும்பகோணம், மதுரையில் இளங்கலை படிப்புகளாகக் கற்றுத் தரப்படுகின்றன. அரசு கவின்கலைக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.06.2025 | https://artandculture.tn.gov.in https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r

*கீழடி* *தோண்டாதது துயரம்!* *தோண்டிய விவரத்தை வெளியிடாதது பெருந்துயரம்!* *வரலாறு என்பது உரிமை! அது யாரும் யாருக்கும் எழுதிவைக்கும் உயில் அல்ல!* *அஸ்தினாபுரத்து அரக்கு மாளிகையின் கரிமக் கணக்கு எங்கே? எதை வைத்துப் பெயரிட்டார்கள் "மகாபாரத காலம்" என்று!!!* *சல்லடை போட்டுத் தேடியும் "பாண்டவர் உருட்டிய" அந்தப் பகடை கிடைக்கவே இல்லை!* *கீழடியில் தோண்டத் தோண்ட கிடைப்பன பண்டம் பாத்திரங்கள்!* *"கதாபாத்திரங்கள்" அல்ல!* *தரவுகளால் வரலாற்றைக் கட்டமைப்போம்!* *கட்டுக்கதைகளை கட்டுடைப்போம்!* *சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர் தரவுடன் நாங்கள் வருகிறோம்! "எங்கே அமர்ந்து பேசலாம்" என்று நீங்கள் சொல்லுங்கள்!* *சிந்துவெளிப் புனல்!* *கீழடி மணல்!* *ஈரடிக் குறள்!* *முதுவாய்க் குயவனின் தொழில் நுட்பம்! "கலம் செய் கோ" செய்த மண் பானையில் கரிம நுண்சுருள்!* *அகழ்வாராய்ச்சியும் இலக்கியமும் இதுபோல் இந்தியாவில் வேறெங்கும் கைகுலுக்கியது இல்லை!* *"பானைத் தடம்" பற்றுவோம்!* *நம் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வோம்!* *ஹரப்பா!* *லோத்தல்!* *கீழடி!* *கடந்த காலம் தான் நம்மைக் கடந்து செல்கிறது மீண்டும் மீண்டும்!* *"கீழடி"* *வாயில் சுட்ட* *வடை அல்ல!* *வரலாற்றுக்கான விடை!* *கீழடி இன்னும் வாசிக்கப்படாத சங்க இலக்கியம்!* *"23 ஆம் புலிகேசிகளின்"* *வரலாற்றுப் புனைகதையின் அடிமடியில் விழுந்த அடி கீழடி!* *"கீழடி" மக்கள் "புளியோதரை" மட்டும் சாப்பிட்டாங்கன்னு நீ எதை வச்சு சொல்ற!* *"அங்க ஒரு புளியங்கொட்டை கெடந்துச்சு..அத வச்சு தான்!"* *கீழடி என்பது ஒரு சோற்றுப் பதம். தாய்த்தமிழ் நடந்த தடம்.* *கீழடி* *"ஆகாசக் கோட்டை" அல்ல. மெய்வருத்தக் கூலி!* *கீழடி என்பது வைகைக்கரை பண்பாட்டின் கீழ்வாசல்படி.* *சங்க இலக்கியம்: சிந்துவெளி முன்னிகழ்வின் மீள்நினைவு!* *கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூரின் நேர்முக வர்ணனை!* *ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r/1949

எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்! ஏமாற மறுக்கிறோம் நாங்கள்! *அசோகர் என்றொரு பேரரசன்* வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது! *ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)* என்ற வெள்ளைக்காரன் வரும்வரை! ஒரு *ஜான் மார்ஷல் (John Marshall)* வந்து *சிந்துவெளி நாகரிகம்* பற்றி அறிவிக்கும் வரை *நீங்கள் சொன்ன பொய்களே* இந்நாட்டின் வரலாறு! *கால்டுவெல் (Caldwell)* வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட *திராவிட மொழிக் குடும்பம்* பற்றி பேசும் வரை நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு! *தேவ மொழி* என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் *உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி* என்று கதை சொன்னீர்கள்! *சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர்* தரவுடன் நாங்கள் வருகிறோம்! "*எங்கே அமர்ந்து பேசலாம்* என்று நீங்கள் சொல்லுங்கள்! சங்க இலக்கியம் பேசிய *பகடையை* *சிந்துவெளியிலும் கீழடியிலும்* நாங்கள் காட்டுகிறோம்! *மகாபாரதப் பகடையை* நீங்கள் காட்டுங்கள்! *வரலாறு என்பது வந்த வழி பற்றிய கேள்விகளுக்கான விடை! வாயில் சுடும் வடை அல்ல!* *அதே ஆட்டம் அதே பகடை உருள்வது ஆடுபவன் தலை அல்ல!* *ஆர் பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r


*கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை* தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில். https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r


https://www.youtube.com/live/K6g2ZM8gB0w?si=u6OvYY0CGLxxlYmp

டாஸ்மாக் விவகாரம் முதலில் இரண்டு averments: 1. டாஸ்மாக்கில் திமுக ஊழல் செய்திருக்குமா..? சர்வ நிச்சயமாய் ஊழல் செய்திருக்கும்..! 2. டாஸ்மாக்கில் அதிமுக ஊழல் செய்திருக்குமா..? சர்வ நிச்சயமாய் செய்திருக்கும்..! Now : அமலாக்கத்துறை என்ன செய்கிறது டாஸ்மாக்கில்..? போலீஸில் சிலர் கம்ப்ளெயிண்ட்ஸ் : "இந்தக் கடையில் MRP விட அதிகமா வாங்கினான்.." "இவன் ஹாஃப் கட்டிங் காசு வாங்கிட்டு குவார்ட்டர்தான் கொடுத்தான்.." "தப்பான பிராண்ட் விஸ்கி கொடுத்துட்டான், போதையே இல்ல..." இப்படியானவை.! இதுபோல 2017லிருந்து 40 போலீஸ் கேஸ்கள். கவனியுங்கள்: 2017லிருந்து..! சொல்லுங்கள் : மிகப் பெரிய குற்றங்களை விசாரிக்க வேண்டிய அமலாக்கத்துறை, மிகக் கடுமையான PMLA சட்டத்தை உபயோகிக்கத் தோதான விவகாரமா இது..? இது போலீஸ் அல்லது CBI கவனிக்க வேண்டிய விஷயம். PMLA என்பது மிக மிக சீரியஸான, நாட்டைப் பாதிக்கும் குற்றங்களுக்கான விசேஷச் சட்டம்..! டாஸ்மாக்கில் குவார்ட்டர் கட்டிங் பற்றி விசாரிக்க அல்ல..! அப்புறம் ஏன் ED அதற்குள் சென்றது..? ஏனென்றால் : ED தன்னிச்சையாக ஒரு கேஸைப் போட முடியாது..! ஏற்கனவே ஒரு போலீஸ் கேஸ் இருந்து, அதில் சட்டவிரோத பணப் பரிமாற்ற்ம இருப்பதாகத் சந்தேகம் இருக்கு என்று சொல்லி, ED அதைக் கையில் எடுக்கலாம்..! டாஸ்மாக்கிற்குள் ED நுழைய வேண்டும் என்பதால், அந்த 40 சில்லறைக் கேஸ்களை 'சட்ட விரோத பணப் பரிமாற்றம்' என விசாரிக்கப் போச்சாம்..! டாஸ்மாக் ஹெட் ஆபிஸ் உள்ளே செல்கிறது ED..! போய், இரவு பகலாய் மூன்று நாட்கள் அந்த ஆபீஸையும் அங்கிருக்கும் ஊழியர்களையும் தலைகீழாய் புரட்டிப் போட்டு சோதனை..! அதில், 'வேறு சில ஊழல்களைக் கண்டுபுடிச்சோம், 1000 கோடி ஊழல்.!' என்று அறிவிக்குது ED..! அதெப்படி FIR போடாமயே 1000 கோடின்னு சொன்னாங்க..? எலக்க்ஷன் பாண்ட் மேட்டர்ல, 15000 கோடி ஊழல் என்பதை சுப்ரீம்கோர்ட்டே தலையிட்டு, , விஷயம் வெளிவந்த பின்னும், ED அந்த சம்பந்தப்பட்ட கம்பெனிகளை விசாரிக்க முனையவே இல்லை என்பதையும் Vs. இந்த டாஸ்மாக் சில்லறைக் கேஸில் ED காட்டும் தீவிரத்தையும் ஒப்பிடுங்கள். உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா..? நாடெங்கிலும் பல லட்சம் கோடி money laundering அசால்ட்டா தினம் நடந்து கொண்டிருக்க, அதை எதையும் கவனிக்காமல், ED ஏன் இங்கே தன் resourcesஸை செலவிடுகிறது..? 'திமுக 1000 கோடி ஊழல், 1000 கோடி ஊழல்..!' என்று தினம் நியூஸில் வர வேண்டும்; அதற்காக அமலாக்கத்துறை தன் கௌரவத்தை இழந்தாலும், PMLA சட்டம் தம் மரியாதையை இழந்தாலும் பரவாயில்லை என்று பிஜேபி நினைக்கிறது..! நண்பர்களே..! சுப்ரீம்கோர்ட் நேற்று, இதையெல்லாம்தான், ED யைப் பார்த்து கடுமையாகக் கேட்டிருக்கிறது : "உங்களுக்கென்று இருக்கும் எல்லா வரம்புகளையும் மீறி ஏன் இந்த சில்லறை விஷயத்தில் இவ்வளவு முனைப்பு காட்டினீர்கள்..? தனி மனிதர்கள் மேல் இருக்கும் போலீஸ் கேஸ்களுக்கு, ED விசாரணையா..? ஒரு அராசாங்க ஆபிஸிற்குள் சென்று அங்கிருப்பவர்களை இவ்வளவு harassmentடா..? அரசியல் நோக்கத்திற்காக ED செயல்படுவதா..?" ... என்றெல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கிறது..! சுப்ரீம்கோர்ட், EDயின் டாஸ்மாக் விசாரணக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது..! Of course, இது இறுதித் தீர்ப்பல்ல..! ஆனால்.... *அமலாக்கத்துறையின் மாண்புக்கு, பிஜேபி இறுதிச் சங்கு ஊதி விட்டது.!* *இனி அமலாக்கத்துறைக்கு மரியாதையே இருக்காது..!✍🏼🌹* https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
