Journalist Aashik Signature
February 16, 2025 at 12:54 PM
"பின்னாடி உட்காந்து இருக்கிற 2 பேர் யாரு..?"
"ஒருத்தர்.... அமெரிக்கர்கள் பேசுகிற.... அமெரிக்கன் ஸ்டைல் இங்கிலிஷை... இந்தியனுக்கு புரியும்படி... "இந்தியஇங்கிலிஷ்" ஆக சுலபமான... நம் நாட்டு பள்ளிகளில் பழகிய இங்கிலிஷ் வார்த்தைகளை போட்டு... சிறு சிறு வாக்கியமாக உடைத்துப் பிரித்துக்கொடுக்கிற... தாய்மொழி புலமையற்ற அமெரிக்க வாழ் இந்தியர்.
இன்னோருத்தர்... அந்த 'இந்திய ஸ்டைல் இங்கிலிஷை'... அப்படியே ஹிந்தியாக மொழிமாற்றி... அந்த குர்தா பைஜாமா ஜிப்பா அணிந்த இந்தியர்க்கு மொழியாக்கம் செய்து கொடுக்கிற... ஓரளவுக்கு இங்கிலிஷும் ஹிந்தியும் தெரிந்த ஹிந்திக்காரர்."
"ஆக...
ஒருத்தர்க்கு... ஒரேயொரு மொழி மட்டுமே எழுதப் படிக்க பேசத் தெரியும். ஹிந்தியை... இந்தியன் இங்கிலிஷ்க்காரர் மூலம் மொழியாக்கம் செய்து புரிந்து கொள்கிறார். அவர்தான் அமெரிக்காவுக்கே ஜனாதிபதி.
இன்னொருத்தருக்கு... முன்பு முதலமைச்சர் ஆக இருந்தபோது, அங்கே இரண்டு மொழிகள் பேச வரும். இப்போது பெரும்பாலும் ஒரேயொரு மொழி மட்டுமே பேசுகிறார். அவர்தான் இந்திய பிரதமர்.
இவர்கள் நாட்டையே ஆளுகிறார்கள்.
ஆனால்...
நம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்னாங்கிளாஸ் பள்ளி மாணவர்கள் மட்டும்.... 3 மொழிகளை பேச வேண்டுமாம். அப்போதுதான்... 2052 கோடி கல்வி நிதியை தமிழ் நாட்டுக்குத் தருவார்களாம். "
"என்னாவொரு... ஃபிராடுத்தனம் இது..!"
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
👍
😂
3