Dr.TK.Prabhu - TVK
Dr.TK.Prabhu - TVK
February 20, 2025 at 07:27 AM
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவர் அஞ்சலை அம்மாள் அவர்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் இருந்து பங்கேற்ற முதல் பெண். கர்ப்பிணியாக இருந்த காலகட்டத்திலும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்ற மாபெரும் போராளி. மக்களுக்காக போராடி மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்ட, தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த வழிகாட்டி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் பெயரில், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் வழிகாட்டுதலில் நமது காரைக்குடி கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன், உடன் கழக தோழர்களும் கலந்து கொண்டனர். அஞ்சலை அம்மாள் அவர்களின் தியாகங்களை அவரது நினைவு நாளில் போற்றி வணங்குவோம்.
❤️ 10

Comments