
Dr.TK.Prabhu - TVK
1.2K subscribers
About Dr.TK.Prabhu - TVK
Official Account of Dr TK Prabhu - District Secretary, Tamilaga Vettri Kazhagam, Karaikudi Constituency, Sivagangai East District. Twitter - https://x.com/drtkprabhu_tvk Instagram - https://www.instagram.com/prabhuthurai
Similar Channels
Swipe to see more
Posts

*தலைவர் தளபதி* அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை கூட்டம்! தமிழக வெற்றிக் கழக *தலைவர் தளபதி* அவர்களின் 51வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வரவுள்ளதை முன்னிட்டு, அன்புக்குரிய அண்ணன் *பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA* அவர்களின் வழிகாட்டுதலின்படி சிவகங்கை கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் சார்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் காரைக்குடியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்ன மாதிரியான சமூக நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்படலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக கல்வி உதவித் தொகைகள், ஏழை மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கல், இலவச மருத்துவ முகாம், ரத்ததானம், மரக்கன்றுகள் நடவு, முதியோர் இல்லங்களில் உணவளிப்பு போன்ற பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் இளைஞர் அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது யோசனைகளைப் பகிர்ந்தனர்.

தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் உத்தரவின் பேரில், மே 18 இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நமது காரைக்குடி அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்த நமது சொந்தங்கள் நினைவாக, இந்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடத்தப்பட்டது. இதில் நமது கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.