Dr.TK.Prabhu - TVK
February 25, 2025 at 02:27 PM
தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும், ஒவ்வொரு வீடுகளிலும் வேரூன்றி வருகிறது. தமிழகம் முழுக்க தினந்தோறும் பல்வேறு கணக்கான மக்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும், செயல்பாடுகளுக்காகவும் இன்று காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நமது கழகத்தின் கொடியை ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தேன். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தலைவர் தளபதி அவர்களின் சார்பிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தேன்.
❤️
👍
8