தமிழர் மருத்துவம்🍎
February 2, 2025 at 07:50 AM
இரைப்பை, ஈரல் ஆகியவற்றை
பலமாக்கி சிறுநீரகத்தை பாதுகாக்கும்
மல்லியாதி கசாயம்
தேவையான பொருட்கள்
1 ) கொத்துமல்லி விதை
2 ) வில்வ வேர்ப்பட்டை
3 ) கோரைக்கிழங்கு
4 ) சிற்றாமுட்டி வேர்ப்பட்டை
5 ) மேல்தோல் சீவப்பட்ட சுக்கு
6 ) நெற்பொரி
மேற்கண்ட ஆறு வகையான சரக்குகளும் வகைக்கு 5 கிராம் எடை அளவிற்கு.
செய்முறை
நாட்டுச் சர்க்கரை அல்லது
பனங்கற்கண்டு தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்
தேவையான அளவிற்கு மேற்கண்ட சரக்குகளை சேர்த்து கலந்து ஒன்றும் பாதியாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டு வைத்துக் கொள்ளவும்
தேவையான பொழுது இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஐம்பது மில்லி அளவிற்கு சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி குடிக்கவும்
காலை, மாலை என இரண்டு வேளையும் அல்லது காலையில் மாத்திரம், அல்லது மாலையில் மாத்திரம் ஒரு வேளையும் குடிக்கலாம்.
தீரும் நோய்கள் -
பித்தங்கள், சத்திகுன்மம், தேகத்திலுள்ள உஷ்ணம் முதலியவை நீங்கி குளிர்ச்சியுண்டாம்
சாப்பிடும் ஆகாரம் ஜீரணமாகும். இரைப்பை, குடல் முதலியவைகளில் உண்டாகும் வாயு குடலிரைச்சல் ஆகியவைகளும் தீரும்.
இரைப்பை, ஈரல்,, முதலியவைகளுக்குப்
பலம் முண்டாகும்,
மிகவும் எளிமையான முறையில் சின்ன மருந்தை போன்று தோற்றத்தைக் கொண்டிருக்கும்
அதிகப்படியான விசேஷ செயல்திறன் மிக்க மருந்து
இதனை சாப்பிட்டு வந்த நோயாளிகளின் கருத்து என்னவென்றால் கிரியேட்டின் அளவைக் குறைக்கிறது,
சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது. சிறுநீரக சுருக்கம் சரியாகி விட்டது என்று நூற்றுக்கும் மேற்பட்ட வைத்தியர்களும்
கூறியுள்ளார்கள்
நன்றி மருத்துவர் T.M. சிவப்பிரகாசம் அவர்கள்
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p