
தமிழர் மருத்துவம்🍎
425 subscribers
About தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை இங்கு காணலாம்
Similar Channels
Swipe to see more
Posts

https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p "வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்" பரிவ்ருத்த திரிகோணாசனம் மனம்:- இடுப்புப் பகுதி மற்றும் கைகள். மூச்சின் கவனம்:- குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு. உடல் ரீதியான பலன்கள்:- முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது . வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது. சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன. உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது. இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது. குணமாகும் நோய்கள்:- பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது. உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது. எச்சரிக்கை :- தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது. "சர்வதேச யோக தினம்" (ஜூன்21) யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! "ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"


"கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்" "பாத ஹஸ்தாசனம்" மனதின் கவனம்: வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்களை.. மூச்சின் கவனம்: கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு. உடல் ரீதியான பலன்கள் :- உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது. குணமாகும் நோய்கள் : ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது. ஆன்மீக பலன்கள் : உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது. எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது. யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..! "ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்" https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p


https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p ஜலதோஷம் வருவதுபோல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு, 1 சிட்டிகை மஞ்சள், 1சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சாப்பிட வேண்டும். அதன் பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ள கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி. இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.... திண்டுக்கல்சமையல்


உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாதபோது , உங்கள் மூளை உண்மையில் "தன்னைத்தானே சாப்பிட" ஆரம்பிக்கும். பொதுவாக, ஆஸ்ட்ரோசைட்டுகள் எனப்படும் சிறப்பு மூளை செல்கள் கழிவுகளை சுத்தம் செய்து பலவீனமான அல்லது சேதமடைந்த நரம்பியல் இணைப்புகளை அகற்ற உதவுகின்றன. ஆனால் தொடர்ந்து தூக்கமின்மையால், இந்த செல்கள் அதிகமாக செயல்படத் தொடங்கி ஆரோக்கியமான மூளை ஒத்திசைவுகளை கூட உடைக்கத் தொடங்குகின்றன. மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், மூளையில் உள்ள மைக்ரோக்லியா எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இந்த வகையான அதிகப்படியான செயல்பாடு அல்சைமர் போன்ற மூளை நோய்களின் ஆரம்ப கட்டங்களில் நடப்பதை ஒத்திருக்கிறது - இது நீண்டகால தூக்கமின்மை நீண்டகால மூளை சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது. நன்றாகவே தூங்ஙுங்ஙள் தூக்கத்திற்கு முக்யத்துவம் கொடுங்ஙள் ஆரோக்யம் மேம்பட வாழ வாழ்த்துக்கள் நலமுடன் வாழ ரமணா வைத்யசாலை திருநெல்வேலி https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p


https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p நம் பாரம்பரிய மருத்துவத்தில் பத்தியம் நம் மருத்துவம் தனது வைத்திய முறைகளில் உணவுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது. மருந்துடன், வியாதிக்கேற்ற பத்திய உணவையும் பரிந்துரைக்கிறது. இந்த பத்திய உணவு முறைகளை கடைப்பிடிக்காவிட்டால், மருந்துகளால் மட்டும் பயனிருக்காது. நம் பாரம்பரிய மருத்துவம் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் சமநிலை கெட்டால் வியாதிகள் உண்டாகும் என்ற அடிப்படை கருத்தை கொண்டது. பத்திய உணவு, தகுந்த மருந்துடன் இணைந்து, நோயை களைய, உதவுகிறது. நம்மில் பலர், பத்தியம் என்றாலே பயப்படுகிறார்கள். ஆங்கில முறை வைத்தியத்தில் மருந்துகளுக்கு பத்தியம் இல்லை. மருந்துகள் மட்டும் சாப்பிட்டால் போதாதா என்று நினைப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் பத்தியமின்றி நோயைக் குணப்படுத்த இயலாது. உதாரணமாக அஜீர்ணம் காய்ச்சலை உண்டாக்கும். இயற்கை வெளிபாடுகளை தவிர்ப்பது, நீண்ட பிரயாணம், போன்ற காரணங்களால் உண்டாகும், இந்த நோய்க்கு, சூடாக வெந்நீர் சாப்பிட்டால் நல்லது. வெந்நீரை சிறிது சிறிதாக குடித்து வந்தால், உடலின் இயற்கை சூடு அதிகமாகிறது. வாயு தோஷம் கெட்டிருப்பதை வெந்நீர் நேர்ப்படுத்துகிறது. உடல் லேசாகிறது. இங்கு வெந்நீர் பத்தியம். பத்திய முறைகள் உப்பில்லா பத்தியம் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். இப்போது உப்புள்ள பண்டம் தான் குப்பையிலே. உப்பு உடலுக்கு தேவையான பொருள் தான். வயிற்றில் ‘அக்னி’, உப்பால் வளருகிறது. உணவில் ருசி கூட்டுவது உப்பு. ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு தான் மனித உடலுக்கு தேவை. நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகளிலிருந்தே உடலுக்கு தேவையான உப்பு கிடைக்கும். எனவே தனியாக உப்பு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதிக உப்பு ஆபத்து. இதன் விளைவுகள் அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் ஏற்படும். சிலருக்கு சோடியம் உப்பை வெளியேற்ற முடியாது. அப்போது தேங்கிய உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தக் குழாய்களில் உப்பு சேர்ந்து, குழாய்களில் உட்புறத்தில் படிந்து, இரத்தம் முழுவதுமாக ஓட முடியாமல் தடை செய்யும். உடலிலிருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மகோதரம் போன்ற வியாதிகளில் உப்பு, குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கி விடும். இந்த மாதிரி சமயங்களில் உப்பில்லா பத்தியம் பலனளிக்கும். மகோதரத்திலும், வேறு காரணங்களாலும் அதிக அளவில் சிறுநீர் போவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். உப்பை நிறுத்துவது தான் வழி. உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் உப்பை தவிர்க்க வேண்டும். உப்பில்லா பத்தியம் மனநிலைமையும் சரிவர இருக்க உதவுகிறது. வியர்வை தோன்றாது. அசதி குறையும். உப்பில்லா பத்தியத்தை கடைப்பிடிக்கும் போது, பால், மோர், இவை சேர்ந்த அன்னம், பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். புளி, மிளகாய், எண்ணை, முற்றிய காய்கறிகள் இவைகளை உப்பின்றி சமைத்து உண்பதால் கேடுகள் விளையும். உப்பை நிறுத்துவதின் முக்கிய காரணம் நுண்ணிய ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதே. உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல தர முள்ள இந்துப்பு கிடைப்பது கடினம். உப்பை வறுத்து சேர்ப்பதும் உண்டு. மாதத்தில் பல நாட்கள் உப்பை முழுவதும் தவிர்த்து இதர நாட்களில் உப்பை வறுத்தும் உபயோகிக்கலாம். புளிப்பில்லாத பத்தியம் புளியானது அரிசி, துவரை, உளுந்து இவற்றை செரிக்க உதவுகிறது. குடலில் வாயுவையும் மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற உதவும். புளியை தவிர எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புச் சுவை உள்ளவை. அதிக அளவில் புளியை உபயோகித்தால், இரைப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை தோன்றும். தோல் வியாதிகளும் உண்டாகலாம். சிறுநீரக கோளாறுகளுக்கும் புளி காரணமாகலாம். இந்த நிலைமைகளில், புளியை தவிர்க்க வேண்டும். புளி மட்டுமல்ல எலுமிச்சம் பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றையும் தவிர்க்க வேண்டும். பழுத்த புளியை 6-7 மாதங்கள் ஜாடியில் வைத்து, எடுத்து உபயோகிக்கும் போது, அனலிலிட்டு வாட்டிய பின் உபயோகித்தால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது. வாயு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம் கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாயுவை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாயுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாயுவின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன. கரப்பான் பண்டம் நீக்கிய பத்தியம் கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.


மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...! வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்... யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்.. மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்.. இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது. பெயர் விளக்கம்: தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர். தத்துவம்: தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. செய்முறை: முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும். விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும். கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும். ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும். மூச்சின் கவனம்: கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு. உடல் ரீதியான பலன்கள்: நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது. குணமாகும் நோய்கள்: ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க... உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது. ‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும். யாருக்கு இந்த ஆசனம்: ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம். ஆன்மீக பலன்கள்: மனஅமைதி பயன்பெறும் உறுப்புகள் : குதிக்கால்கள், கைகள். எச்சரிக்கை: இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது. யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! "ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்" https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p


உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -8 பட்ச சுத்தி இந்த பட்ச சுத்தி முறைக்கு மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால்பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுதுபோல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 ஜாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உஷ்ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர். இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோகசாதனையை செய்யும்போது உடலில் படிப்படியாக பல மாற்றங்களை உணரலாம். தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p


https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம் நன்கு முற்றிய கல்யாண பூசணிக் காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும். பாதாம் பருப்பு – 10 கிராம் பிஸ்தா பருப்பு – 10 கிராம் அக்ரோட் பருப்பு – 10 கிராம் சாரப் பருப்பு – 10 கிராம் கசகசா – 10 கிராம் பாதாம் பிசின் – 10 கிராம் வேலம் பிசின் – 10 கிராம் ஆவாரம் பிசின் – 10 கிராம் முருங்கைப் பிசின் – 10 கிராம் மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். கல்யாணப் பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு, ½ லிட்டர் பசும்பால் சேர்த்துக் கரைத்து அடுப்பேற்றி, சிறுதீயாய் எரிக்கவும். பாகு பதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு, பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும். லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். தினசரி காலை, இரவு உணவுக்குப்பின் பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து, தேகம் வலுத்து தாது பெருகும். அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்துளியில் (விந்து) உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும், மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இவர்கள் மேற்கண்ட லேகியம் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.


புல்லுருவி பலன்கள் ஏதேனும் ஒரு மரத்தில் இருந்து முளைக்கும் மற்றோர் செடி அல்லது கொடி புல்லுருவி எனப்படும். அதாவது தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்தில் இருந்து இது எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு புல்லுருவிக்கு ஒவ்வொரு நாள், நட்சத்திரம், திதி, பலி பூசைகள் இருக்கிறது. முழுமையான பூஜைகள் செய்து எடுத்தால்தான் முழுமையாக பலன்கள் உண்டாகும். (1) மா புல்லுருவி வசியம் செய்யலாம். நல்ல பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். (2) மூங்கில் புல்லுருவி நமக்கு கெட்டது செய்யும் சதா தொந்தரவு செய்யும் எதிரியை இல்லாமல் செய்துவிடும், சர்வ சத்ரு நாசம். (3) அரச மர புல்லுருவி இழந்த சொத்துகளை திரும்ப பெறலாம் நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். (4) நெல்லி மர புல்லுருவி எதிராளி துன்பப்படுவான், அழிந்து போவான் (5) வெள்ளெருக்கன் புல்லுருவி பகையாளி வணங்குவர், வியாபார விருத்தி, உத்தியோகம், தொழில் விருத்தி ஏற்படும். (6) வெண்நாவல் புல்லுருவி போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி. (7) காட்டு எலுமிச்சை புல்லுருவி எந்த பொருளை தொட்டாலும் பலமடங்கு பெருகும், புத்திர சந்தானம் எற்படும். (8) அரச மர புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (9) மலை வாகை புல்லுருவி எவ்வளவு வறுமையில் இருந்தாலும் மிகப்பெரிய செல்வந்தன் ஆவார்கள். (10) காட்டு இலந்தை மர புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (11) வில்வ புல்லுருவி தொழில் வசியம், வியாபார வசியம் மற்றும் கடன் தொல்லை நீங்கி நல்ல தொழில் நடக்கும். (12) வன்னிமர புல்லுருவி போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி. (13) பவளமல்லி புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (14) இலுப்பை புல்லுருவி தொழில் ரீதியாக சத்ருக்கள் இருந்தால் விலகி போவார்கள், போட்டி பொறாமைகள் நீங்கும். (15) கருங்காலி புல்லுருவி குல தெய்வம் இஷ்ட தெய்வம் வசியமாகும், தேவதா வசியம் ஏற்பட்டு அபூர்வ ஆற்றல் உண்டாகும், இறை சிந்தனை எற்பட்டு தீய சக்தி விலகும். உதாரணத்திற்கு மா புல்லுருவியை எடுத்து கொள்வோம் அவிட்ட நட்சத்திரத்தில் மாமரத்தின் மேல் உள்ள புல்லுருவிக்கு காப்புக்கட்டி பலிகொடுத்து தூபதீபம் கொடுத்து வசிய மந்திரம் ஜெபித்து. கொண்டு வந்து வேண்டியவர் வீட்டில் மந்திரம் ஜெபித்து வைக்க வசியமாவர். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

மூவிலைத் தைலம் தேவையானவை மருதாணி இலைச்சாறு – 25 கிராம் பொன்னாங்கண்ணி இலைச்சாறு – 25 கிராம் கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 5 கிராம் நல்லெண்ணை – 50 கிராம் செய்முறை மேற்சொன்னவற்றை பெரிய பாத்திரத்தில் இட்டு, காய்ச்சவும். தைல பதத்தில் இறக்கி வடிகட்டி பயன்படுத்தவும் பயன்கள் முடிக்கு பளபளப்பை தரும். முடி உதிர்தல், இளநரையை நிறுத்தும். உடல் சூட்டை குறைக்கும் கண் எரிச்சல், தலைவலி, பித்தக்கொதிப்பு, செம்பட்டைத்தலைமுடி தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து போகும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p