தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
February 8, 2025 at 04:28 PM
*காய்ச்சலின்போது இதெல்லாம் செய்யக் கூடாது?* சராசரியாக, சாதாரண உடல் வெப்பநிலை 37°C (98.6°F) ஆகும். உங்களின் வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் உங்களுக்கு காய்ச்சல் இருக்கின்றது என்று @அர்த்தம். உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை மூலம் வெளியேற்றும் செயல்தான் காய்ச்சல். இந்த செயலில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன. *என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?* காய்ச்சல் இருக்கும்போது உடல் சற்று அதிகமாகவே நீரை இழக்கச்செய்யும். அப்போது நீராகாரம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். தாகம் எடுத்தால் வெந்நீரை ஆற வைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம். காய்ச்சல் நேரத்தில் சரியாக சாப்பிட முடியாது. உடல் சோர்வாக இருக்கும். நாக்கில் கசப்புத்தன்மை இருக்கும். ஆனால், அதற்காக சாப்பிடாமல் இருந்தால் உடல் இன்னும் சோர்வடையும். அதனால் அரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகளை சாப்பிடலாம். திட உணவுகளை சாப்பிட முடியாதபோது திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அந்த நிலையில் பசிக்கும்போது, ரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். ரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது மிகவும் நல்லது. பருப்பு, புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போன்ற துவையல் வகைகளை தொட்டுக்கொள்ளலாம். காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக்கூடாது. காலையில் பல் தேய்த்தவுடன் வெறும் வயிற்றில் 2 கற்பூரவல்லி இலைகள், 10 துளசி இலைகள் சாப்பிடலாம். நம்முடைய பாரம்பரிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடம்பில் சத்துப் பிடிப்பதோடு, உடம்புக்குள் வைரஸ்கள் வந்தாலும் அவை தடுத்துவிடும். *சாப்பிடக்கூடாத உணவுகள் :* காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்து கொள்ளாமல் உணவை சாப்பிடாதீர்கள். நோய்த் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம். காய்ச்சலில் இருக்கும்போது துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை குறைக்கிறது. குறிப்பாக, காய்ச்சலின்போது டீ அல்லது காபி குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

Comments