ஊர்க்கோடாங்கி
ஊர்க்கோடாங்கி
February 12, 2025 at 03:18 AM
வெற்றியைத் தடுக்கும் முதல் காரணி என்ன? 🌹🌹🌹 பாலாஜியும் சரவணனும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால், ஒப்பீட்டுப் பார்வை இயல்பாகவே வந்தது. பாலாஜிக்கு அனைவரிடமும் மரியாதையும் மதிப்பும் அதிகம் இருந்தது, ஆனால் சரவணனுக்கு அது கிடைக்கவில்லை. இது ஏன் என அவர் அறிய விரும்பினார். ஒருநாள், அந்த நிறுவனத்தின் கடைநிலை ஊழியரை அழைத்து, "என் நண்பர் பாலாஜி எப்படி?" என்று கேட்டார். அந்த ஊழியர் புன்னகையுடன், "சார், இந்த நிறுவனத்தில் மிக அருமையான மனிதர் பாலாஜிதான். அவருக்கு கோபம் என்றால் என்னவென்றே தெரியாது. டீ எடுத்து வர எதுவும் தாமதமானாலும், அவர் புன்னகையுடன் ‘பரவாயில்லை’ என்று கூறிவிடுவார்" என்றார். சரவணனுக்கு இப்போது உண்மையான காரணம் புரிந்தது. அவன் மிகப்பெரிய பலவீனம் - அவன் கோபம்! அதே ஊழியர் கூறியபடி, சரவணன் பலமுறை மற்றவர்களிடம் கோபமாக நடந்து கொண்டிருக்கிறான். சிறிய தாமதத்திற்கே கடிந்து கொண்டவன். இதன் விளைவாக, அவன் மீது எவருக்கும் நேசமும் மதிப்பும் ஏற்படவில்லை. கோபம் – வெற்றிக்கு அடிக்கல்லா, தடைக்கல்லா? வெற்றிபெற வேண்டும் என்றால், நம்முடைய மனதை கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். கோபம் ஒரு மரத்தின் வேர் போல. அது பரவி பரவி நம்முடைய செயல்பாடுகளை பாதித்து, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். ஆனால் நாம் அதை கட்டுக்குள் கொண்டு வந்தால், ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் செயல்பட்டு வெற்றியை நோக்கி நகர முடியும். கோபம் கொண்ட ஒருவர் மற்றவர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். அவர்கள் புறக்கணிக்கலாம், பயப்படலாம். யாருமற்ற சூழலில் வெற்றி பெறுவது சாத்தியமா? வெற்றிக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம். கோபத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்? ஒரு ஞானி இதை அழகாக விளக்குகிறார்: "சுற்றி இருப்பது சகதியாக இருந்தாலும், அதையே உரமாகக் கொண்டு, தாமரை தன் முழு அழகுடன் மலர்கிறது." அதேபோல், நமது சுற்றுப்புற சூழல் எப்படிப் பேரினாலும், நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொண்டு, நம் முயற்சியில் உறுதியாக இருக்க வேண்டும். நமது குணம் மீது கவனம் செலுத்துபவர்களே சிறந்த தலைவர்களாக உருவாக முடியும். ஆகவே, நாம் கோபத்தைக் கட்டுப்படுத்தி, வெற்றிக்குத் தேவையான நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளலாமா? வெற்றி நம்முடையதுதான்!

Comments