ஊர்க்கோடாங்கி
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 04:19 PM
                               
                            
                        
                            *இரவு நேர சிந்தனை*
உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். என்னால் முடியும் என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.
நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும்போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள்
வந்து சேரும்.
குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள் சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும்.
பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள் தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள்.
பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை 
வெற்றி நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். 
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"
*இனிய இரவு வணக்கம்*