HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
January 31, 2025 at 01:13 AM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 31th Jan 2025 - Friday
Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef
இறைவனின் படைப்புகளில் அற்புதமானவன் மனிதன்
உலகிலுள்ள பொருள்கள் அத்தனையும் வெளித்தோற்றத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த வெளித்தோற்றம் என்றைக்கும் அழிந்து போகலாம். அதனைச் செல்லாக் காசுக்கு ஒப்பிடலாம்; அல்லது முலாம் பூசிய பித்தளைப் பொருளுக்கு ஒப்பிடலாம். சிறிது நாட்களில் அதன் உண்மைத் தோற்றம் வெளியில் வந்துவிடும். தவிர, ஒரு பொருளில் இருக்கும் தோற்றம் அந்தப் பொருளுக்கே சொந்தமானதல்ல; அது வெளியிலிருந்து வந்திருக்கும் இரவல் சரக்கு. எனவே அது என்றாகிலும் ஒருநாள் அழிந்துதான் ஆகவேண்டும்.
'எனவே உங்களை நீங்களே உற்றுப் பாருங்கள். இறைவனின் படைப்புகளில் அற்புதமானவன் மனிதன். மனிதனை நன்கு ஆராய்கிறவர்களால் இறைவனை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
✍️ இறைஞானி ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️
😇
🙏
🪔
7