HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION WhatsApp Channel

HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION

700 subscribers

About HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION

We are here to bring Deep Insights & tools to help you understand Hazrath S. Abdul Wahhab Baqavi's Teachings and Practices. https://www.hazrathabdulwahhab.org/

Similar Channels

Swipe to see more

Posts

HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 7:01:05 PM
Post image
❤️‍🔥 👑 2
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 7:01:04 PM
Post image
❤️‍🔥 👑 2
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/24/2025, 10:35:47 AM

*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹*" "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 24 - May - 2025 (Saturday) *இறைவணக்கத்திற்கு அடுத்தபடியாக உங்கள் சிந்தனைக்குரியவை கண்களே* மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகளில் சிறப்புமிக்கது கண். சிலவேளை படைப்பினத்தைப் பார்த்துப் படைத்தவனை அறியும் அது. வேறு சிலவேளை படைத்தவன் விரும்பாதவற்றைப் பயமின்றிப் பார்க்கிறது. திருமறையைப் பார்க்கும் அதே கண்கள், சிலவேளை இறைபக்தனின் பணியைக் குறைத்துப் பார்க்கின்றன. கனிவு சொட்டும் கண்கள், சில நேரங்களில் அனலைக் கக்குகின்றன. எனவே, இறைவணக்கத்திற்கு அடுத்தபடியாக உங்கள் சிந்தனைக்குரியவை கண்களே. அகிலத்தையே அளந்து பார்க்கும் இந்தக் கண்கள் ஏன் படைக்கப்பட்டிருக்கின்றன என்று சிந்தனை செய்யுங்கள். அவை எதற்கென்று படைக்கப்பட்டனவோ அதற்கு அவற்றைப் பயன்படுத்துங்கள். இறைவன் கொடுத்த கண்களை அவன் விரும்பாத வழியில் செலுத்தும் உரிமை உங்களுக்குக் கிடையாது. يا قَادِر الْـحَمْدُ للهِ ✍️ நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.

Post image
❤️ 6
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 7:01:06 PM
Post image
❤️‍🔥 👑 2
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 11:08:07 AM

*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹*" "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 23 - May - 2025 (Friday) *இறைவணக்கம் பற்றிய சிந்தனை அனைத்துக்கும் முதலில் இருக்கட்டும்* இறைவனின் அன்புக்கு அருகதை பெறுவது எப்படி? இந்த வினாவை மையமாகக் கொண்டுதான் உங்களுடைய முதற் சிந்தனை ஆரம்பமாகிறது. எனவே உங்கள் மீது இறைவன் ஏற்படுத்தியிருக்கும் பொறுப்புகளை எண்ணிப் பாருங்கள். முதலில் உங்கள் சிந்தனையை ஐங்காலத் தொழுகைக்குக் திருப்புங்கள். அவற்றைக் குறைவின்றி நிறைவேற்றுவது எப்படி, நிறைந்த நெஞ்சத்தோடு- ஒருமித்த மனத்தோடு இறைவணக்கத்தில் ஈடுபடுவது எப்படி என்று சிந்தனை செய்யுங்கள். தேவையான நூல்களைப் படியுங்கள். தெரிந்தவர்களைத் தேடிப் பிடித்து விளக்கம் கேளுங்கள். இறைவணக்கம் பற்றிய சிந்தனை அனைத்துக்கும் முதலில் இருக்கட்டும். ஏனெனில் அதன் சிறப்பு மற்ற அனைத்தையும் விட உயர்ந்தது. உங்களுக்கு இறைவனின் அன்பைச் சம்பாதித்துத் தரும் ஆற்றல் அதற்குண்டு. الْـحَمْدُ للهِ يا قَادِر ✍️ நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.

Post image
❤️ ❤️‍🔥 🤲 6
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 7:01:15 PM

*"🌹Dhul Qaidah 23 Uroos Mubarak From Ervaadi Dargah Shareef, Ramanathapuram District 🌹"* ஞான கோட்டைக்குள் வாழ்ந்த ஸூஃபியாக்கள் உரூஸ் முபாரக் இறைவனுக்காக வாழ்ந்த இறை நேசர்களை நினைவுகூறும்போது இறைவனின் அருள் பார்வை நம் மீது பரிபூரணமாக ஏற்படுகிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ரஹ்மத்துடைய வாசல் திறக்கப்படுகிறது. கௌதனா ஷெய்கனா சுல்தான் ஷஹீது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ முராது ஹாஸில் ஃபித்துன்யா வயௌமித்தீன். يا قَادِر الْـحَمْدُ للهِ

❤️ ❤️‍🔥 👍 🤲 8
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/25/2025, 3:31:17 PM

*🌹Burdha Shareef Day - Knowledge and Clarity - Sufism Path - Hazrath Speaks - Nagore Shareef ( Timing 8:30 to 8:55 PM)🌹* *அன்றே! நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி நாயகம் அவர்கள் கூறினார்கள்...* என் அறிவுரை‌ படி வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களென்றால் உங்களுக்குகுள் சில கோட்பாடுகள் தனக்குத்தானாகவே உருவாகும். இப்படி ஒவ்வொன்றுக்கும் எதற்கு உள்ளது என்று யாரும் சொல்லாமலே புரிய ஆரம்பித்துவிடும். يا قَادِر الْـحَمْدُ للهِ *ஏகத்துவமும் எதிர்வாதமும்* இறைவன் ஒருவனே என்பது நம் கொள்கை. வணக்கத்திற்குரியவனும் அவனே என்பது நம் சித்தாந்தம். பெருமானார் மட்டுமன்றி, உலகில் தோன்றிய திருத்தூதர்கள் அனைவரும் மக்களுக்கு கற்றுக்கொடுத்த உண்மை இது. அனைத்தையும் படைத்து ஆளுகிறவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்; அவன் தனியோன். அவனுக்கு இணையுமில்லை; துணையுமில்லை. அவனைத் தவிர்த்து மற்றொரு நாயன் எந்தக் கோணத்திலும் இருக்க முடியாது. அப்படி அவனைத் தவிர்த்து மற்றொருவன் இருந்தால், முதலவனைப் போல இரண்டாமவனும் உலகத்திற்குத் திருத்தூதர்களை அனுப்பியிருப்பான். ஒரு திருத்தூதர் ஏகத்துவத்தைப் போதித்த போதெல்லாம் மற்றொரு திருத்தூதர் இல்லை. அது தவறு. இரண்டு இறைவர்கள் இருக்கிறார்கள். என்று பிரச்சாரம் செய்திருப்பார். அப்போது எங்கும் தோன்றும் முறையான அமைப்பும் அகிலம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறையறிவும் நிச்சயம் மாறுபடும். ஆனால், அப்படியில்லை. மக்களுக்கு மேலிடத்திலிருந்து சட்டங்களை எடுத்துவரும் எந்தத் திருத்தூதரும் ஏகத்துவத்துக்கு மாறுபட்ட வழியில் பிரவேசித்ததில்லை. பரந்து விரிந்த இவ்வுலகில் தோன்றிய ஆயிரமாயிரம் திருத்தூதர்கள் ஒன்றுபட்டுக் கூறிய உண்மை ஏகத்துவம். திருத்தூதர் என்ற பெயரில் தோன்றிய எவரும் அதை மறுத்ததில்லை. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் என்றைக்கும் இருக்க முடியாது. இருப்பதெல்லாம் ஒரே இறைவன். அவனே அனைத்துக்கும் முதல்வன், ஏனெனில் அவன் அனைத்தையும் படைத்தவன். அவனே அனைத்துக்கும் இறுதியானவன், ஏனெனில் அவன் அனைத்தையும் அழிக்கக்கூடியவன். அவனுடைய பேராற்றல்கள் மனிதனின் புலன்களுக்கு அப்பாற்பட்டவை. உள்ளத்தின் திறமையினால் அளந்து பார்க்க முடியாதவை. உன் திறமையைப் பற்றி நீ முதலில் நன்கு தெரிந்து வைத்துக்கொள். உன் திறமையை உயர்த்தி மதித்து விடாதே. உன் திறமை பலவீனமானது எனக்கு நன்றாகத் தெரியும். உன் சிந்தனை அப்படி யொன்றும் பேராற்றல் பொருந்திய கருவியல்ல. உன்னால் இதை மறுக்க முடியாது. உன் சிந்தனை இன்னும் அவ்வளவு தூரத்துக்கு முன்னேறி விடவில்லை. இறைவனின் உதவி உனக்கு எப்போதும் தேவைப்படும். உன்னால் அதை புறக்கணிக்க முடியாது. எனவே, அன்பு மகனே, உன் நிலையை உணர்ந்து நடந்துகொள். உன்னைப் போன்றவர்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்க முயற்சி செய். போதிய அனுபவமில்லாத இந்த வயதில், நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை என் அறிவுரைகள் தெளிவாக எடுத்துக்காட்டும். உனக்கு அப்படியொன்றும் நான் உனக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இறைவனின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து நடந்துகொள். மனிதன் சிறப்புடன் வாழ்வதற்கான எல்லா வழிகளையும் இறைவன் வகுத்து கொடுத்திருக்கிறான். அவன் கட்டளையிடுவதெல்லாம் நல்ல காரியங்கள், மறுப்பு தெரிவிப்பதெல்லாம் கெட்ட காரியங்கள். எனவே நல்லதை எடுத்து நட; கெட்டதை ஒதுக்கித்தள்ளு. நான் சொல்வதெல்லாம் இதுதான். இதற்குமேல் உன்னை நான் சிரமப்படுத்தப் போவதில்லை. அன்பு மகனே! உலகைப் பற்றியும் அதன் நிலையைப் பற்றியும் உனக்கு நான் எழுதிவிட்டேன்.அது நிலைத்து நிற்கக்கூடியதல்ல என்பதும் உனக்கு தெரிந்ததுதான். இவற்றை நீ எப்போதும் உன் நெஞ்சில் வைத்துக் காக்க வேண்டும். உலக வாழ்க்கையை மட்டுமே நம்பிகொண்டிருப்பவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள். அவர்கள் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் பெரும் துன்பத்தைத் தாங்க வேண்டி ஏற்படும். இன்ஷா அல்லாஹ் தொடரும்... ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.

Post image
❤️ 👑 🙏 3
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/24/2025, 8:47:13 PM

*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹*" "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 25 - May - 2025 (Sunday) *இவற்றில் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள்* உங்களால் தீயதையும் கேட்க முடியும்; நல்லதையும் கேட்க முடியும். எனினும் இவற்றில் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள். எதைக் கேட்கக் கூடாதோ அதில் சிறிதளவும் உங்கள் செவிக்குள் நுழையக் கூடாது. உங்கள் செவியுணர்வு பற்றிக் கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள். "செவிப்புலன் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று. செவிடர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது இறைவன் எனக்குத் தெளிவான செவியைக் கொடுத்திருக்கிறான். அதுகுறித்து இறைவனுக்கு நான் நன்றி செலுத்த வேண்டாமா? நல்ல கருத்துகளுக்கும் திருமறையின் விரிவுரைகளுக்கும் என் செவி மடுப்பதில்லையே, இதற்குக் காரணம் என்ன? எனக்கேன் இந்த அவல நிலை ஏற்பட வேண்டும்? அவன் கொடுத்த செவிச்செல்வத்தை நான் பயனின்றிப் பாழ்படுத்துகிறேன். நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நான் மாற்றம் செய்கிறேன். நான் இப்படி நடந்து கொண்டிருந்தால் இறைவனின் அன்பு எனக்கு எப்படிக் கிடைக்க முடியும்...?" يا قَادِر الْـحَمْدُ للهِ ✍️ நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.

Post image
❤️ 🙇‍♀️ 7
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/23/2025, 7:01:04 PM
Post image
❤️‍🔥 👑 2
Image
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
5/22/2025, 8:51:31 PM

*🌹Hazrath Quotes - Sufism Path - Philosophy of Life - Nagore Shareef🌹* அறிவுள்ளவன் எப்போதும் அறிவோடு இருப்பதில்லை. الْـحَمْدُ للهِ يا قَادِر ✍️ நாகூர் ஆண்டவரின் வழித்தோன்றல் திருப்பேரர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ.

Post image
❤️ 👍 6
Image
Link copied to clipboard!