
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 2, 2025 at 12:59 AM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 2nd - Feburary - 2025 - Sunday
Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef
ஞான நூல்களைப் படிக்கிறவர்கள் புதியதொரு கண்ணோட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றை எழுதிய ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்களின் சிந்தனை எந்தக் கோணத்திலிருந்து இயங்கிற்று என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். இப்படி அவர்களை மனக்கண் முன்னால் நிறுத்திக் கொண்டு அவர்களின் நூல்களைப் படித்தால் நிச்சயமாகப் பாதி கருத்தையேனும் புரிந்து கொள்ளலாம். மறுபாதி என்னாயிற்று என்று கேட்கிறீர்களா? அது படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடியதல்ல; அனுபவித்துப் பார்க்கக்கூடியது. எனவே அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது. இந்தப் பகுதி எப்போதுமே சிக்கலானது தான். என்றாலும் இந்தப் பகுதியையும் அவர்கள் விளக்கமுற்பட்டிருக்கிறார்கள்
குட்டிக் கதைகளையும் சுத்தமான உவமானங்களையும் ஆதாரமாக வைத்து தம்மால் இயன்ற அளவு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
✍️ இறைஞானி ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️
🙏
🤲
6