
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 2, 2025 at 11:34 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 3rd - Feburary - 2025 - Monday
Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef
உங்கள் உடலுக்கு எது உணவாக இருக்கிறதோ, அது உங்கள் உள்ளத்துக்கு உணவாக இருக்க முடியாது.
உணவும் உறக்கமும் தேவை. இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை. இவை உள்ளத்தைவிட உடலுக்குத்தான் அதிகமாகப் பயன்படுகின்றன. இந்த இன்பத்தில் திருப்தி காண்கிறவர்கள் பலர். ஆனால் உங்களுக்கு இந்த இரண்டையும் தவிர்த்து வேறோர் உணவு உண்டு. அது உங்கள் உடலுக்கு நேரடியாகப் பயன்படாவிட்டாலும், உள்ளத்துக்கு நிச்சயம் பயன்படும். உங்கள் உடலுக்கு எது உணவாக இருக்கிறதோ, அது உங்கள் உள்ளத்துக்கு உணவாக இருக்க முடியாது.
குதிரைக்கு உணவாகப் பயன்படும் ஒன்று, குதிரை வீரனுக்கு உணவாகப் பயன்படமுடியாது. குதிரை வீரன் கண்ணை மூடிக்கொண்டிருந்தால், அவனை அந்தக் குதிரை எதிர்த்திசையில் இழுத்துச் சென்றுவிடும்.
✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️
🙏
🤲
9