HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 11, 2025 at 09:46 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 12th - Feburary - 2025 - Wednesday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef தியானமும் சிந்தனையும் அவற்றிற்குரிய எண்ணங்களைவிடச் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. "முஸ்லிமின் எண்ணம் அவன் செயலைவிடச் சிறந்தது" என்று திருநபியவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் இப்படிக் கூறியிருப்பதற்குச் சிலர் இவ்வாறு காரணம் காட்டுகின்றனர். எண்ணம் என்பது மருமமான ஒன்று. இறைவனைத் தவிர்த்து வேறு யாராலும் ஒரு மனிதனின் உள்ளத்திலுள்ள எண்ணத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், செயல் இப்படியில்லை. அது பகிரங்கமானது. மருமமான ஒன்று பகிரங்கமான ஒன்றைவிடச் சிறந்தது என்பது வெளிப்படையான விஷயம். எனவே, செயலைவிட எண்ணம் சிறப்படைகிறது. இது நேர்மையான கருத்துதான். ஆனால், நபியவர்கள் அப்படிக் கூறியிருப்பதைப் பொதுவாக எல்லா இடங்களிலும் எடுத்துக் கொண்டுவிட முடியாது. சில இடங்களில் செயலை விட எண்ணம் சிறந்து விளங்குவதில்லை. இறைவனைத் துதிக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிறான். இப்படி எண்ணுவது அந்தச் செயலைச் செய்வதைவிடச் சிறந்ததல்ல. முஸ்லிம்களின் நன்மையில் கவனம் செலுத்தி ஆராய வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிறான். இந்த எண்ணம் இந்தச் செயலை விட மேலானதல்ல. நபியவர்களின் கருத்தைப் பொதுவாக எடுத்துக்கொள்ளும்போது இத்தகைய இடங்களில் செயலைவிட எண்ணமே சிறந்தது என்று சொல்ல வேண்டிவரும். இது சரியல்ல. இறை துதி என்பது அதற்குரிய எண்ணத்தைவிட எந்த வகையிலும் தாழ்ந்ததல்ல. முஸ்லிம்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து, அதற்குரிய எண்ணத்தைப் பார்க்கிலும் எந்த விதத்திலும் கீழானதல்ல. எனவே, தியானமும் சிந்தனையும் அவற்றிற்குரிய எண்ணங்களைவிடச் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️ 👍 🤲 8

Comments