HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
February 23, 2025 at 03:28 PM
Burdha Shareef Day - Hazrath Speaks உங்களிடத்தில் அன்பும்,நற்குணமும், பணிவும் இருக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் இன்னும் துர்குணத்தில் இருக்கிறீர்கள் உங்களை நீங்கள் திருத்தி கொள்ள வேண்டும்‌? இஸ்லாம் எனப்படும் இம் மார்க்கம் புனிதமானது. இதைத் தனக்கே உரித்தான அன்பு மார்க்கமாக இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். இந்த மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் நீங்கள் உயர்ந்த குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். தயாளத்தாலும் நற்குணத்தாலும் இம்மார்க் கத்தை அழகுபடுத்துங்கள்." ''மக்களுக்கு உங்கள் செல்வங்களையெல்லாம் அள்ளிக் கொடுக்க வேண்டியதில்லை; அது உங்களால் முடியாது. இன்முகம் காட்டி அன்பு மொழி கூறிப் பண்புடன் பழகுங்கள்- அது போதும்!" என்று கூறியிருக்கிறார்கள். மீண்டும் கூறினார்கள்; நீ மனிதன் உன்னை இறைவன் அழகிய தோற்றத் துடன் படைத்திருக்கிறான். உன் புற அழகைப் போன்று அக அழகையும் குண அழகையும் உண்டாக்கிக் கொள்! நபியவர்கள் இறைவனிடம் இப்படி இறைஞசுவதுண்டு: இறைவனே! என்னை அழகிய உருவத்துடன் படைத் திருக்கிறாய். என் புற அழகைப் போன்று என் அக அழகையும் -குணங்களையும் அழகுடையவையாக ஆக்குவாயாக! ஆரோக்கியத்தையும் நற்குணத்தையும் எனக்குத் தந்தருள் வாயாக!" "உங்களில் நற்பண்புடையவர்களே மறுமையில் என்னோடு மிகவும் நெருங்கியிருப்பார்கள்" என்று கூறியுள் ளார்கள். ''அடியிற்கண்ட மூன்று விஷயங்களில் ஒன்று ஒருவனிடம் இல்லையாயின் அவனுடைய காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. துர்ச் செயல்களைத் தடுக்கும் இறையச்சம். முட்டாள்களை மன்னிக்கும் மனப்பான்மை. மக்களுக்கு மத்தியில் பழகுவதற்கு வேண்டிய மனப் பக்குவம்...உயர் பண்பு!" என்று அருளியுள்ளார்கள். இறை வணக்கத்தின் ஆரம்பத்தில் அண்ணலவர்கள் இப்படிப் பிரார்த்திப்பார்கள்: "இறைவனே! நற்பண்புகளுக்கும் நற்குணத்திற்கும் எனக்கு வழிகாட்டு உன்னைத் தவிர்த்து வேறு யாராலும் எனக்கு அவற்றின் பால் வழிகாட்ட முடியாது. என் உள்ளத் தைத் தீய மனப்பாங்கிலிருந்து திருப்பிவிடு. உன்னைத் தவிர்த்து வேறு யாராலும் என உள்ளத்தைத் திருப்ப முடியாது!" ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ II நாகூர் ஷரீஃப்
❤️ 🙏 4

Comments