
Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
February 25, 2025 at 07:05 PM
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்*
*சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை (26.02.2025) புதன்கிழமை காலை 11.00 மணியளவில்*
*(1) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.*
*(2) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில்*
*தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 45,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.*
*குறிப்பு:*
*மேற்கண்ட நிகழ்ச்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான LIVE VIDEO OUT சென்னை, தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*- இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு),*
*செய்தி மக்கள் தொடர்புத் துறை*
*தலைமைச் செயலகம்,*
*சென்னை.*
*******