Arappor Iyakkam
Arappor Iyakkam
January 31, 2025 at 06:46 AM
நிதி மோசடி, முறைகேடுகள், அளவுக்கு அதிகமான பேராசியர்கள், பணியாளர்கள் சுமை போன்ற காரணங்களால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, தமிழ்நாடு அரசு 2014 முதல் நிர்வகிக்க துவங்கியது. அதன் முதல் துணை வேந்தரான திரு.மணியன் அவர்கள் (2015 - 2018), நியமிக்கப்படுகிறார். இந்த சூழலில் துணைவேந்தர், சிண்டிகேட் தீர்மானம் எண் 26, Date:01.11.2016 மற்றும் Finance Committee தீர்மானம் எண்: 28, Date:01.11.2016 நிறைவேற்றி (இணைப்பு 1 : RTI கடிதம்), அதன் மூலம் நிரலர்கள் (Programmer) எனும்  பணியாளர்களை அதாவது, ஆசிரியர் அல்லாத பணியாளர்களை, பேராசிரியப்பணி மேற்கொள்ள அனுமதிக்கிறார் (Redesignated). இது முற்றிலும் உயர்கல்வித்துறை விதிகளுக்கு எதிரானது. மேலும், இது மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரானதும் கூட. இந்த உள்நோக்கம் கொண்ட தீர்மானம் இன்று வரையிலும் செயல்பாட்டிலும் இருக்கிறது. எனவே, இரு தீர்மானங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும், இந்த முறைகேடான தீர்மான காலங்களில் பொறுப்பில் இருந்த முன்னாள் துணை வேந்தர்கள் திரு. .S.மணியன் (2015 – 2018), திரு. .V.முருகேசன் (2018 – 2021), திரு. இராமநாதன் (2021 – 2024), மற்றும் முன்னால் சிறப்பு அலுவலர் திரு சிவதாஸ் மீனா IAS அவர்களிடம் இருந்து உரிய விளக்கம் பெறப்பட்டு தவறு செய்தவர்கள் மற்றும் தவறுக்கு துணைபுரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் கோருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் கீழ் இருக்கும் அனைத்து பல்கலைக்கழங்களில் இது போன்ற மோசடி நடைபெற்றுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்வித்தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கோருகிறது. இதுகுறித்தான புகாரை, உரிய ஆதாரங்களுடன், இன்றைய தினம், முதலமைச்சர் திரு.M.K.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன், அரசுத் தலைமைச் செயலாளர் திரு.N.முருகாநந்தம் IAS, உயர்கல்வித்துறைச் செயலாளர் டாக்டர் கே கோபால் IAS மற்றும் ஆணையர் திரு டி.ஆபிரகாம், IAS அவர்களுக்கும் அனுப்பியுள்ளது. https://youtu.be/u8TniDca1Qc?feature=shared

Comments