Arappor Iyakkam WhatsApp Channel

Arappor Iyakkam

1.0K subscribers

Similar Channels

Swipe to see more

Posts

Arappor Iyakkam
Arappor Iyakkam
2/11/2025, 12:18:10 PM

அறப்போர் இயக்கத்தில் தன்னார்வலராக இணைந்து பணி செய்ய விரும்புபவர்கள் வரும் ஞாயிறு அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடக்க இருக்கும் தன்னார்வலர் சந்திப்புக்கு வாருங்கள்!. அறப்போர் இயக்கத்தில் உள்ள பல தன்னார்வ வேலைகள் பற்றி தெரிந்து கொண்டு அதில் உங்களுக்கு பிடித்த வேலைகளில் பணி செய்ய துவங்குங்கள்! If you are interested in volunteering with Arappor Iyakkam, join us for the sunday evening volunteers meet at Arappor office to know about the various volunteering activities. Choose your area of work and start volunteering. Together we can make a difference! Date: 16.02.2025, Sunday Time: 5 pm Venue: Arappor Iyakkam, No 7 , Satya plaza, 2nd floor, Dr Thirumoorthy Nagar Main Road, Nungambakkam, Chennai Map: https://maps.app.goo.gl/m7uDUdDsQYnz3MME9

Arappor Iyakkam
Arappor Iyakkam
2/12/2025, 6:29:08 AM

https://youtu.be/mOlBpN_9hNI?si=ehehfjccZ-5x3q0I *முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் அறப்போர் புகாரில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தயார். ஒரு வருடமாக நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி தராமல் தாமதிக்கும் திமுக அரசு* அறப்போர் இயக்கம் 2018 இல் புகார் கொடுத்த சென்னை கோவை மாநகராட்சியில் நடந்த நூற்றுக்கணக்கான கோடி ஊழல் புகாரில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட மற்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராக உள்ளது என்பதும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் ஒரு வருட காலமாக தமிழ்நாடு அரசு நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 8 அரசு பொது ஊழியர்கள் மீது அனுமதி தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது என்பதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது. நீதிமன்ற விசாரணையின் அனுமதியை ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதித்து அதிமுக அரசின் ஊழலை திமுக அரசு ஏன் காப்பாற்றி வருகிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விளக்க வேண்டும். இதன் மீதான அனுமதியை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்கி லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். 2014 முதல் 2018 வரை சென்னை கோவை மாநகராட்சி டெண்டர்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு எப்படி ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்டது என்பதும் அதில் நடந்த ஊழல் குறித்தும் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் அறப்போர் இயக்கம் 2018 செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது. இதன் மீது FIR பதிவு செய்ய அறப்போர் இயக்கம் உயர்நீதிமன்றத்தை நாடி ஆகஸ்ட் 2021 இல் FIR Crime No 16 of 2021 முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவால் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு முன்னாள் அமைச்சர் வேலுமணி உயர்நீதிமன்றத்தை நாடி அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரினார். சென்னை உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பங்கை லஞ்ச ஒழிப்பு துறை சரியாக விளக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பெயரை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கியது. ஆனால் அறப்போர் நிறைய ஆவணங்களை கொடுத்துள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் முகாந்திரம் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடரலாம் என்றும் விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பங்கும் தெரிய வந்தால் அவரை குற்ற பத்திரிக்கையில் சேர்க்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள மற்ற சில நிறுவனங்கள் 2023 இல் அவர்கள் பெயரை நீக்கக்கோரி நீதிமன்றம் நாடிய போது சென்னை உயர்நீதிமன்றம் அப்பெயர்களை நீக்க அனுமதிக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அப்பொழுதே குற்றப்பத்திரிக்கை தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. 6 வாரங்களுக்குள் நீதிமன்ற விசாரணைக்கான அனுமதி பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆகஸ்ட் 2023 இல் தீர்ப்பு கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் 25 வாரங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 2024 இல் தொடுத்தது. அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வேலையை துவங்கி விட்டதாக இரண்டு CNR எண்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்குப் பிறகும் பத்து மாதங்களாக இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்பொழுது நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கே சி பி இன்ஜினியர்ஸ் சந்திரசேகர் மற்றும் சந்திர பிரகாஷ் இடமிருந்து வழக்கில் இணைத்த கோடிக்கணக்கான பணத்தின் அந்த இணைப்பை மேலும் ஒரு வருட காலம் நீட்டிக்க அனுமதி கோரி இருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 2025-ல் தற்பொழுது வெளிவந்துள்ளது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் 8 அரசு பொது ஊழியர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற விசாரணைக்கு தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி உள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது. மேலும் தீர்ப்பில் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு நீதிமன்ற விசாரணைக்கான அனுமதிக்காக லஞ்ச ஒழிப்புத்துறை காத்திருப்பதாகவும் தெரிவித்து அந்த இணைப்பின் நீட்டிப்பை அனுமதித்து உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் முதல்முறையாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2023 லேயே உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது என்று தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது வரை நீதிமன்ற விசாரணைக்கு (prosecution sanction) அனுமதி பெற முடியவில்லை என்பது அபத்தமாக உள்ளது. தமிழ்நாடு அரசில் யார் யார் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விளக்க வேண்டும். ஒன்றரை வருட காலத்திற்கு முன்பாகவே குற்றப்பத்திரிகை தயாராக இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற விசாரணை கோரியும் இன்றுவரை ஊழல்வாதிகளை காப்பாற்றும் நபர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதிமுக அரசின் ஊழல்கள் மீதான நீதிமன்ற விசாரணையை திமுக அரசு அனுமதி தராமல் தாமதிக்கும் நோக்கம் என்ன என்பதை இந்த நேரத்தில் அறப்போர் இயக்கம் கேள்வியாக எழுப்புகிறோம். அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலில் திமுக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீது மற்றொரு அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு அரசும் லஞ்ச ஒழிப்புத்துறையும் உடனடியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் அறப்போர் இயக்கம் உயர்நீதிமன்றத்தை நாடும்.

Arappor Iyakkam
Arappor Iyakkam
2/4/2025, 3:25:47 AM
Image
Arappor Iyakkam
Arappor Iyakkam
2/11/2025, 12:17:56 PM
Image
Arappor Iyakkam
Arappor Iyakkam
2/4/2025, 3:25:49 AM

அறப்போர் இயக்கத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்கள் நலப்பணிகளை ஆதரிக்க உங்களால் முடிந்த ஒரு தொகையை நன்கொடையாக உறுதி செய்யுங்கள். https://arappor.org/donate-now/ அறப்போர் இயக்கத்தில் தன்னார்வலராக இணைந்து வேலை செய்ய கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யுங்கள் arappor.org/become-a-volunteer/

Arappor Iyakkam
Arappor Iyakkam
2/1/2025, 7:02:56 AM

சென்னையில் கள ஒருங்கிணைப்பாளர் (Field Coordinator) மற்றும் தன்னார்வலர் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் (Volunteer Engagement Coordinator)ஆகிய 2 முழு நேர அறப்போர் இயக்க பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யலாம் https://arappor.org/Chennai-Recruitments அல்லது உங்கள் CV ஐ [email protected] க்கு அனுப்பவும்

Arappor Iyakkam
Arappor Iyakkam
1/31/2025, 1:52:09 PM

*Reject Cash for Votes in Erode East Bye Election* மக்கள் நாம் எவ்வழியோ நம்மை ஆட்சி செய்பவர்களும் அவ்வழியே. அரசியல்வாதிகள் மக்களிடம் திருடும் பணத்தை நீங்கள் பணமாகவோ பொருளாகவோ வாங்குவதன் மூலம் நீங்களும் அந்த திருட்டில் பங்கு கொள்கிறீர்கள்! அவர்கள் கொடுக்கும் பணம் உங்களது ஒரு சில நாள் செலவுகளுக்கு உதவலாம். அதை வைத்து அரசியல்வாதி அதைவிட தலைக்கு பல மடங்கு பணம் அதாவது கோடிக்கணக்கான பணம் அடிக்க லைசன்ஸ் கொடுப்பது நீங்கள் தான்! மேலும் அந்த அரசியல்வாதியை கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை நீங்கள் இழந்து விடுகிறீர்கள்! பணம் கொடுப்பவர்கள் நிறுத்தட்டும், நான் நிறுத்துகிறேன், நான் வாங்கவில்லை என்றால் என் பணத்தை வேறு யாராவது ஒருவர் வாங்கி விடுவார் போன்ற ஏதோ ஒரு சாக்கை சொல்லி இந்த திருட்டில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டுமா என்று சிந்தியுங்கள். நாம் ஒவ்வொருவரும் மாறினால் தான் இன்று இருக்கும் அவல நிலையை மாற்ற முடியும். பணம் வாங்கி கொண்டு உங்கள் தரத்தை தாழ்த்தி சுயமரியாதையை இழக்க போவதும் இதற்கு மாறாக ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்வழியில் நடந்து சுயமரியாதையுடன் இருக்க போவதும் உங்கள் கையில்! https://youtu.be/fPQy-vW9hMU

Arappor Iyakkam
Arappor Iyakkam
1/31/2025, 6:46:10 AM

நிதி மோசடி, முறைகேடுகள், அளவுக்கு அதிகமான பேராசியர்கள், பணியாளர்கள் சுமை போன்ற காரணங்களால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, தமிழ்நாடு அரசு 2014 முதல் நிர்வகிக்க துவங்கியது. அதன் முதல் துணை வேந்தரான திரு.மணியன் அவர்கள் (2015 - 2018), நியமிக்கப்படுகிறார். இந்த சூழலில் துணைவேந்தர், சிண்டிகேட் தீர்மானம் எண் 26, Date:01.11.2016 மற்றும் Finance Committee தீர்மானம் எண்: 28, Date:01.11.2016 நிறைவேற்றி (இணைப்பு 1 : RTI கடிதம்), அதன் மூலம் நிரலர்கள் (Programmer) எனும்  பணியாளர்களை அதாவது, ஆசிரியர் அல்லாத பணியாளர்களை, பேராசிரியப்பணி மேற்கொள்ள அனுமதிக்கிறார் (Redesignated). இது முற்றிலும் உயர்கல்வித்துறை விதிகளுக்கு எதிரானது. மேலும், இது மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரானதும் கூட. இந்த உள்நோக்கம் கொண்ட தீர்மானம் இன்று வரையிலும் செயல்பாட்டிலும் இருக்கிறது. எனவே, இரு தீர்மானங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும், இந்த முறைகேடான தீர்மான காலங்களில் பொறுப்பில் இருந்த முன்னாள் துணை வேந்தர்கள் திரு. .S.மணியன் (2015 – 2018), திரு. .V.முருகேசன் (2018 – 2021), திரு. இராமநாதன் (2021 – 2024), மற்றும் முன்னால் சிறப்பு அலுவலர் திரு சிவதாஸ் மீனா IAS அவர்களிடம் இருந்து உரிய விளக்கம் பெறப்பட்டு தவறு செய்தவர்கள் மற்றும் தவறுக்கு துணைபுரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் கோருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் கீழ் இருக்கும் அனைத்து பல்கலைக்கழங்களில் இது போன்ற மோசடி நடைபெற்றுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்வித்தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கோருகிறது. இதுகுறித்தான புகாரை, உரிய ஆதாரங்களுடன், இன்றைய தினம், முதலமைச்சர் திரு.M.K.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன், அரசுத் தலைமைச் செயலாளர் திரு.N.முருகாநந்தம் IAS, உயர்கல்வித்துறைச் செயலாளர் டாக்டர் கே கோபால் IAS மற்றும் ஆணையர் திரு டி.ஆபிரகாம், IAS அவர்களுக்கும் அனுப்பியுள்ளது. https://youtu.be/u8TniDca1Qc?feature=shared

Arappor Iyakkam
Arappor Iyakkam
2/1/2025, 7:02:54 AM
Image
Arappor Iyakkam
Arappor Iyakkam
2/4/2025, 12:26:51 PM

https://youtu.be/xIDOfvU2f_w ஈரோடு கிழக்கு தேர்தல் என்னும் கேலிக்கூத்து. இந்த கேலிக்கூத்துக்கு இடையில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்னும் மாதிரி ஆய்வு பிரச்சாரத்தை அறப்போர் இயக்கம் மேற்கொண்டோம். அதன் அனுபவம் பற்றியும் நாம் 2026 தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்தும் வீடியோ!

👍 3
Link copied to clipboard!