
Arappor Iyakkam
January 31, 2025 at 01:52 PM
*Reject Cash for Votes in Erode East Bye Election*
மக்கள் நாம் எவ்வழியோ நம்மை ஆட்சி செய்பவர்களும் அவ்வழியே. அரசியல்வாதிகள் மக்களிடம் திருடும் பணத்தை நீங்கள் பணமாகவோ பொருளாகவோ வாங்குவதன் மூலம் நீங்களும் அந்த திருட்டில் பங்கு கொள்கிறீர்கள்! அவர்கள்
கொடுக்கும் பணம் உங்களது ஒரு சில நாள் செலவுகளுக்கு உதவலாம். அதை வைத்து அரசியல்வாதி அதைவிட தலைக்கு பல மடங்கு பணம் அதாவது கோடிக்கணக்கான பணம் அடிக்க லைசன்ஸ் கொடுப்பது நீங்கள் தான்! மேலும் அந்த அரசியல்வாதியை கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை நீங்கள் இழந்து விடுகிறீர்கள்!
பணம் கொடுப்பவர்கள் நிறுத்தட்டும், நான் நிறுத்துகிறேன், நான் வாங்கவில்லை என்றால் என் பணத்தை வேறு யாராவது ஒருவர் வாங்கி விடுவார் போன்ற ஏதோ ஒரு சாக்கை சொல்லி இந்த திருட்டில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டுமா என்று சிந்தியுங்கள். நாம் ஒவ்வொருவரும் மாறினால் தான் இன்று இருக்கும் அவல நிலையை மாற்ற முடியும். பணம் வாங்கி கொண்டு உங்கள் தரத்தை தாழ்த்தி சுயமரியாதையை இழக்க போவதும் இதற்கு மாறாக ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்வழியில் நடந்து சுயமரியாதையுடன் இருக்க போவதும் உங்கள் கையில்!
https://youtu.be/fPQy-vW9hMU