Arappor Iyakkam
February 28, 2025 at 05:30 AM
சுனாமி நகரில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீரே வருகிறது. எழில் நகரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்சார ஒயர்கள். ஏற்கனவே சிலருக்கு ஷாக் அடித்துள்ளது. கண்ணகி நகரில் முதல் ஒரு மணி நேரத்திற்கு வரும் அழுக்கு தண்ணீரை வெளியே விட்டு விட்ட பிறகு தான் தண்ணீரை பயன்படுத்த முடிகிறது. குழந்தைகளை படிக்க வைக்க செலுத்த வேண்டிய சிந்தனைகளை செலுத்த முடியாமல் அடிப்படை தேவைகளுக்கே ஓடியாட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய கட்டிடங்களை இவ்வளவு மோசமான நிலையில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கிட்டதட்ட 800 மக்கள் கையெழுத்திட்ட புகாரையும் அறப்போர் புகாரையும் அரசுக்கு அனுப்பியுள்ளோம். நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்க மக்களாகிய நாம் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீங்களும் இந்த வீடியோவை பகிர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். மக்களுக்கு தினமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கக் கூடியதை உறுதி செய்வோம். அடிப்படை வசதிகளை உறுதி செய்வோம்.
https://youtu.be/SkamPYILQ4c?feature=shared
👍
1