
Our Temples Our Pride Our Right
February 6, 2025 at 06:07 AM
பண்பாடு/பக்தி/கலாசார தாக்குதல் என்பது பலருக்கும் தெரிவதில்லை - உளவியல் தாக்கம் பலருக்கு தெரிவதில்லை!!
எதிர்ப்பார்த்தார் போல பல அறைவேக்காடுகள், நான்
@ranjanigayatri
கர்னாடக சங்கீத மேடையில், ஆபாச சினிமா பாடல்களை பாடியதை விமர்சித்ததை பொறுக்காமல், கதறிக்கொண்டு இருக்கின்ரதை பார்க்க முடிகிறது.
நன்றாக கதறவும்!!
கர்னாடக சங்கீத மேடையை பக்தியில்லாமல் அணுகுபவர்கள் கதறத்தானே செய்ய வேண்டும். அது கர்ம பலன். நிற்க!!
இங்கே பல ஜ்ஞான ஹீனர்களுக்கு, எந்த சங்கீதமுமாக இருந்தாலுமே அதற்கு "ராகம்" என்று ஒன்று இருக்காமல் இருக்காது என்றோ, கர்னாடக சங்கீதத்தில் உள்ள ஏதோ ஒரு ராகத்தில் அது அடக்கப்படும் என்றோ, இந்த ராகங்கள் 7 ஸ்வவரங்களுக்குள் ஒன்றோ பலவோ சேர்ந்து இருப்பவை எனவோ தெரியாததனால், தனக்கு இருக்கும் பட்டாணி அளவு அறிவை வைத்துக் கொண்டு, ஜாதியை வைத்து கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றன இந்த குண்டுசட்டி குதிரைகள்.
சினிமா பாடல்கள் ஏராளமானவை தூய்மையான கர்னாடக சங்கீதமாகவே இன்றும் கூட இருப்பதை காணலாம். அந்த மெட்டை பற்றி ஒரு குறையும் இல்லை.
ஆனால் அந்த மெட்டுக்கு எழுதும் சொற்கள் இருக்கின்றனவே அது குறித்துத்தான் பேச்சே!!! நாராசமான, 5ஆம் தர வார்த்தைகளை வைத்து, இரட்டை பொருள்பட எழுதப்படும் பாடல்களை, கர்னாடக சங்கீத மேடைகளில் பாடுவதை பற்றித்தான் பேச்சு
எவ்வளவோ பேர் தங்கள் யுட்யூப் சேனல்களில் பல சினிமா பாடல்களில் உள்ள ராகங்களை பற்றி பேசுகின்றனர். அவர்களை பற்றி எந்த விமர்சனமும் நானும் வைக்கவில்லை யாரும் வைப்பதும் இல்லை.
ஏனென்றால் அவர்களின் மேடையில் அது சர்ச்சை ஆகாது.
ஆனால் தூய்மையான பக்தி ததும்ப வேண்டிய கர்னாடக சங்கீத மேடையில், அந்த அபாச பாடல்களை "ரசித்து" பாடுவது கேவலம்.
இன்று சிறு குழந்தைகளை சினிமா ஆபாச பாடல்கள், காதல் பாடல்களை பாடவைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவது, இப்படி கர்னாடக சங்கீதத்தை கொச்சையான வார்த்தைகளை உடைய பாடல்களை வைத்து பாடி கொச்சை படுத்துவது என்பது இன்று சர்வசாதாரணமாக ஆகிவிடது.
இது, பண்பாடு/பக்தி/கலாசார தாக்குதல் என்பது பலருக்கும் தெரிவதில்லை!
பின் குறிப்பு: இந்த பாடலை வேண்டா வெறுப்பாக பகிர்கிறேன். இத்iல் இந்த சிறு குழந்தை அழகாக பாடுகின்றது. ஆனால் அந்த பாட்டு எதை பற்றி?!! சின்ன குழந்தைகளின் பிஞ்சு மனதில் இப்படிப்பட்ட பாடல்களை "விதைக்கின்றனர்" இந்த சினிமா காரர்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
Bad Girl என்பது மட்டும் கலாசார சீர்கேடு இல்லை. தொலைக்காட்சிகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அன்றாடம் நம்மை உளவியலாக பாதிப்பது தெரியாமலேயே நாம் கொல்லப்பட்டு வருகிறோம்!
👍
🙏
❤️
26